சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலினுடன் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டார் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் வந்து வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இருப்பினும் மயிலாப்பூர் தொகுதியில்தான் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தாருக்கு ஓட்டு இருக்கிறது.

Recommended Video

    சென்னை: ஆளும் கட்சிக்கு தோல்வி பயம்... குடும்பத்துடன் வாக்களித்த மு.க ஸ்டாலின் உற்சாகப் பேட்டி!
    DMK chief MK Stalin casted his vote in Chennai with his son Udhayanidhi Stalin

    இதற்கு முன்பாக, கோபாலபுரம் பகுதியிலுள்ள கருணாநிதி இல்லத்தில் வசித்ததால் ஸ்டாலினுக்கு அங்கு ஓட்டு இருந்தது .

    2011 தேர்தல் வரை ஸ்டாலின் அங்கு வாக்களித்தார். 2016 சட்டசபை தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றிலும், பிறகு தற்போது, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் மயிலாப்பூர் தொகுதியில் ஓட்டுப் போடுகிறார் ஸ்டாலின்.

    தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரி வாக்குச் சாவடிக்கு ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் , அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

    4 தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக திமுக மயிலாப்பூரில் போட்டியிடுகிறது. கடந்த 3 தேர்தல்களாக அதிமுக கூட்டணிதான் மயிலாப்பூர் தொகுதியை வென்றுள்ளது.

    English summary
    DMK chief MK Stalin casted his vote in Chennai Teynampet with his son Udhayanidhi Stalin and wife Durga Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X