அவ்வளவு தான் முடியும்..காங்கிரஸிடம் கறார் காட்டிய அறிவாலயம்! முடியவே முடியாது எனப் பேசிய கதர் கட்சி!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் கூட்டணி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது காங்கிரஸ் தரப்பு. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட அதிக தொகுதிகளை தர வேண்டும் என காங்கிரஸ் கேட்ட நிலையில் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக திட்டவட்டமாக சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. இருதரப்பிலும் மாறி மாறி பேச்சு வார்த்தைகள் நடந்த நிலையில் கூடுதல் தொகுதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் காங்கிரஸ்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் முரண்பாடுகளும் மனக்கசப்புகளும் நீறுப் பூத்த நெருப்பாக இருந்து வரும் சூழலில், கிரிஸ் சோடங்கர் தலைமையிலான காங்கிரசின் ஐவர் குழுவினருடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை இன்று தொடக்கியிருக்கிறது திமுகவின் பேச்சுவார்த்தைக்குழு.
இதற்காக, கோவாவில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு வந்தார் கிரிஸ் சோடங்கர். சென்னைக்கு கிரிஸ் சோடங்கர் கிளம்புவதற்கு முன்பாக,ராகுல்காந்தியும் சோடங்கரும் 30 நிமிடங்கள் ஃபேஸ் டைம்மில் விவாதித்தனர்.

திமுக காங்கிரஸ் கூட்டணி
அப்போது, திமுகவுடன் முரண்பட்டுக்கொள்ள வேண்டாம்.கூட்டணியை உறுதி செய்யுங்கள் என அன்னை (சோனியா) சொல்லியிருக்கிறார்கள். மீற முடியவில்லை. அதற்கேற்ப திமுகவிடம் பேசுங்கள். தேசமயம், காங்கிரசின் கௌரவம் குறைந்து விடக் கூடாது. குறைந்தால் விட்டுவிட வேண்டாம். நமது முடிவில் அழுத்தமாக இருங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என கிரிஸ் சோடங்கருக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தார் ராகுல்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
அதற்கேற்ப, திமுக-காங்கிரசின் முதல்கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது. பேச்சு வார்த்தை முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை, திமுக-காங்கிரஸ் கூட்டணி இயற்கையானது. இந்த கூட்டணி யை சிதைக்க யாரும் முயற்சிக்காதீர்கள். எங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக திமுக தலைமை சொல்லியிருக்கிறது. புதிய கட்சிகள் இணைந்தி ருப்பதைச் சொல்லி எங்களிடம் சீட் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளச் சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.
41 தொகுதி
பேச்சுவார்த்தையில் நடந்தது குறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, இந்த முறை 41 தொகுதிகளையும் 2 ராஜ்யசபா சீட்டுகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்காக 65 தொகுதிகளை அடையாளம் கண்டிருக்கிறோம். இந்த 65 தொகுதிகளில் இருந்து 41 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுங்கள் என கூறி, திமுகவிடம் ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறார் சோடங்கர். அதற்கு டி,ஆர்.பாலுவும் நேருவும், ஏற்கனவே எங்கள் தலைவரும் உங்கள் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் விவாதித்த போது, நடந்ததற்கு மாறாக உங்களின் பட்டியல் இருக்கிறது. 1 ராஜ்யசபா உறுதியாக தருகிறோம்.
2026 சட்டமன்ற தேர்தல்
அதில் மாற்றமில்லை. ஆனால், அசெம்ப்ளி சீட் அவ்வளவு தருவதற்கு எங்களிடம் சீட் இல்லை. இந்த முறை புதிய கட்சிகள் நம் கூட்டணிக்கு வந்துள்ளது. அவர்களுக்கும் சீட் ஒதுக்க வேண்டும். அதற்காக உங்களிடம் சீட்டை குறைத்துக் கொள்ளுங்கள் என சொல்லவில்லை. அதேசமயம், கடந்த தேர்தலில் எத்தனை சீட்டுகளில் கூட்டணிக் கட்சிகள் வெற்றிப்பெற்றுள்ளதோ அதை ஒதுக்குவது சரியாக இருக்கும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. அப்படிப்பார்த்தால் கடந்த முறை 18 தொகுதிகளில்தான் காங்கிரஸ் ஜெயித்தது.
கூட்டணி முரண்பாடு
அதற்காக, 18-தான் உங்களுக்கு என நாங்கள் சொல்லவில்லை. கடந்த முறை காங்கிரசுக்கு 25 சீட் தரப்பட்டது. அதை அப்படியே ரீட்டெயின் பண்ணிக்கலாம். உங்களுக்கு மட்டுமல்ல, கூட்டணியிலுள்ள மற்ற கட்சி களுக்கும் இதே அளவுகோள்தான். காங்கிரசுக்கு ஓரிரு சீட்டுகள் கூடுதலாகக் கொடுத்தால் மற்ற கட்சிகளுக்கும் கூடுதல் சீட் ஒதுக்க வேண்டும். ஆனால் கூடுதல் சீட் ஒதுக்க எங்களிடம் சீட் இல்லையே! திமுக போட்டியிட்ட சீட்டு களில் இருந்துதான் தேமுதிகவுக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் சீட் கொடுக்க வேண்டும். அப்படிப்பார்த்தால் திமுகதான் தன்னுடைய எண்ணிக் கையை குறைத்துக்கொள்ள வேண்டிய சூழல்.
திமுக தரப்பு
அதனால், 25-க்கு ஒப்புக் கொள்ளுங்கள் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதனை காங்கிரஸ் ஏற்கவில்லை. மேலிடத்திடம் பேசிவிட்டு சொல்கிறோம். வாய்ப்பு இருந்தால் மீண்டும் சந்திப்போம் என காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அப்போது, திமுக தரப்பிலிருந்து 18 தொகுதிகள் அடங்கிய ஒரு பட்டியலை கிரிஸ் சோடங்கரிடம் தரப்பட்டது. மற்ற 7 தொகுதிகளுக்கான பெயர்களை பிறகு தெரிவிப்பதாக திமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது என்று பேச்சு வார்த்தையில் நடந்ததை விவரிக்கிறது காங்கிரஸ் தரப்பு.
- சிறப்பு செய்தியாளர் எழில்
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
இவங்க ஜெயிச்சா அவங்கதான் CM.. வேடசந்தூர் டூ ராமநாதபுரம்! இந்த 4 இடத்தை மட்டும் கவனிங்க! ஏன் தெரியுமா -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்! -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா? -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்!












Click it and Unblock the Notifications