உங்களுடன் ஸ்டாலின் முகாம்.. மனு அளிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.. ஸ்டன் ஆன பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அல்வா வழங்கிய திமுகவினர்.

தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் 6,7,8 உள்ளிட்ட வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

உங்களுடன் ஸ்டாலின்

இந்த முகாமிற்கு அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து மனு அளித்து வந்த நிலையில் திமுகவினர் சார்பில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு அல்வா மற்றும் மிக்சர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. இதனை வாங்கிய பொதுமக்களில் சிலர் அல்வா கொடுப்பவர்கள் மனுவிற்கும் அல்வா கொடுப்பார்களா அல்லது நடவடிக்கை எடுப்பார்களா என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

இனிப்பு வழங்கும் பட்சத்தில் திமுகவினர் அளித்த அல்வா தற்போது அப்பகுதியில் பெரும் பேசு பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 6 லட்சம் பேரில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் பணம் கிடைக்கும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர்.

அதில் 6 லட்சம் பேர் வரை மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தனர். இதில் 90 சதவிகிதம் பேர் அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்களுடன் ஸ்டாலின்

கடந்த ஒரு மாத காலமாக இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களும் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ள முடியும்.

தமிழக அரசு வெளியிட்ட தகவல்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் மொத்தம் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், மகளிர் உரிமைத் திட்ட நிதியுதவி கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த 45 நாட்களுக்குள் இந்த மனுக்களுக்குத் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்துள்ளது. மனுக்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

மகளிர் உரிமைத் தொகை

மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியானவர்கள் குறித்த விதிமுறைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், குறிப்பிட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இந்தத் தொகை பெறத் தகுதியற்றவர்கள்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/தண்டுவடம் மறதி நோய், பார்கின்சன் நோய், தசைச்சிதைவு நோய், மற்றும் தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
Magalir Urimai Thogai Applications

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில், ஓய்வூதியம் பெறாத தகுதியுள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமை தொகை

வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில், அந்த மாற்றுத்திறனாளி தவிர்த்து, தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 19,487 இலங்கைத் தமிழர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள் நடத்துவது குறித்து 2025 ஜூன் 19 அன்று தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் மூலம் மேலும் பல பெண்கள் பயனடைய, ஏற்கனவே உள்ள விதிவிலக்குகளுடன் கூடுதல் சலுகைகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், அரசு ஏற்கெனவே வழங்கியுள்ள விதிவிலக்குகளுடன் கூடுதலாக சில சலுகைகளைச் சேர்க்கக் கோரப்பட்டுள்ளது. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் மூலம் விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்கள் பகுதி பகுதியாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+