கூட்டணி கடிவாளம் ஸ்டாலின் கையில்.. மாஸ் காட்டும் திமுக! அதிமுக கூட்டணியில் பாஜக டீம்! எடப்பாடி பாவம்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் தொகுதி பங்கீடு போன்றவை தீவிரமாகி வருகிறது. திமுக முழுக்க முழுக்க கூட்டணியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. முரண்டு பிடித்த காங்கிரசை கூட தற்போது வெறும் மூன்று தொகுதிகளை அதிகமாக கொடுத்து கூட்டணியில் தக்க வைத்துள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பாஜக தான் இருக்கிறது எனவும் கூட்டத்தில் ஒருவராக எடப்பாடி பழனிசாமி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக கூட்டணியைச் சுற்றி பல்வேறு குழப்பங்களும், அதிருப்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இப்போதே தொகுதி பங்கீடு, கூட்டணி வியூகம், முதல்வர் வேட்பாளர் விவகாரம் என அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள உள்கட்ட சிக்கல்கள் தற்போது வெளிப்படையாக பேசப்பட தொடங்கியுள்ளன. அதிமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தரப்பு 60 தொகுதிகளை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி கணக்கு
அதிலும் பழனி, காஞ்சிபுரம், திருத்தணி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கிய கோவில் நகரங்கள் அடங்கிய தொகுதிகளின் பட்டியலை பாஜக தரப்பு முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோரிக்கை அதிமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதிலாக அதிமுக தரப்பு அதிகபட்சமாக 25 தொகுதிகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும் என பேரத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி
இந்த நிலையில், பாஜக மட்டுமல்லாமல் தேமுதிகவும் அதிக இடங்களை எதிர்பார்த்ததால் தான் , கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் தடைபட்டு, தேமுதிக திமுகவுக்கு தாவியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு புறம் இருக்க கூட்டணி தொடர்பான முடிவுகளையும் பாஜகவை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிமுக கூட்டணிக்குள்ளேயே தனியாக பாஜக கூட்டணி உருவாகி இருக்கிறது என விமர்சனம் எழுந்துள்ளது.
அதிமுக பாஜக தொகுதி பங்கீடு
பாமக, புதிய நீதி கட்சி, ஐ ஜே கே உள்ளிட்ட கட்சிகள் முழுக்க முழுக்க கூட்டணி தொடர்பான விவகாரங்களில் பாஜக தலைமையை மட்டுமே நம்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தமாக 70 சீட்டுகளை கொடுத்து விட்டால் தங்களுக்குள் பங்கிட்டு கொள்கிறோம் என பாஜக சொல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராஜ்ஜிய சபா சீட்டு விவகாரத்திலும் அதிமுகவுக்கு பாஜக நெருக்கடி தருவதாக சொல்லப்படுகிறது. இதனால் கூட்டணிக்கு யார் தலைமை என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மு.க.ஸ்டாலின் ஆதிக்கம்
அதே நேரத்தில் எதிர்முகமான திமுகவில் அனைத்து முடிவுகளையும் திமுக தலைமையை எடுத்து வருகிறது. அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு கூட்டணி பேச்சுவார்த்தை என முழு ஆதிக்கத்தையும் கூட்டணி கட்சிகள் மீது திமுக செலுத்தி வருகிறது. கூடுதல் தொகுதி வேண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து பேசிய காங்கிரஸையும் விட்டுப் பிடிப்பது போல தற்போது திமுக காங்கிரசை கூட்டணிக்கு அழைத்து வந்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்
கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வெறும் மூன்று தொகுதிகளை மட்டுமே அதிகப்படுத்தி கொடுத்த திமுக காங்கிரசை கூட்டணிக்குள் வரவழைத்து இருக்கிறது. இதன் மூலம் கூட்டணி கணக்குகளில் திமுகவே முன்னிலை வகிக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications