கிளர்ந்தெழும் திமுக.. இன்று தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம்! திருவள்ளூரில் பேசுகிறார் ஸ்டாலின்
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பாஜக அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்துக் கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" எனும் தலைப்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக அறிவித்தது.
திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொள்வதை மக்களிடம் புரிய வைக்கும் வகையில் இந்த கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் முன்னிலையிலும் இந்த கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.
திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலையும் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டிருந்தது.
முன்னதாக தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தென் மாநில எம்.பிக்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. எம்பி-க்கள் கூட்டு நடவடிக்கை குழு குறித்து வரும் மார்ச் 22ல் ஆலோசனை நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின், தென் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications