கொளத்தூரில் திமுக மண்ணை கவ்வும்! கோடியை கொட்டி நரேட்டிங் செட் செய்தும் விஜயை நெருங்க முடியல: பிரபலம்
சென்னை: எந்தவொரு திமுக நிகழ்விலும் தவெக, விஜய் பெயரைகூட சொல்வதில்லை.. அந்தளவுக்கு விஜய்யை பார்த்து பயந்துகொண்டிருக்கிறார்கள்.. திமுக நிகழ்வுகளில் பெயரை சொன்னால், விஜய் வளர்ந்துவிடுவார் என்று நினைக்கிறார்கள்.. ஆனால், விஜய் எப்போதோ வளர்ந்து நிற்கிறார் என்பதையே இன்னும் அவர்கள் உணரவில்லை. தவெக வளர்ந்து இன்று திமுகவைவிட உயரமாக நின்று கொண்டிருக்கிறது" என்று தவெக கட்சியின் பம்மல் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள விஜய் ஆதரவாளரான பம்மல் கந்தசாமி, "விஜய்யை பார்த்து திமுக பயந்துவிட்டது. இல்லாவிட்டால் எதுக்காக கூகுள் விளம்பரம், மெட் விளம்பரம் தந்து சோஷியல் மீடியாவில் விஜய்க்கு எதிராக விளம்பரம் செய்ய வேண்டும்? கோடிக்கணக்கான பணத்தை கொட்டி விளம்பரம் செய்ய வேண்டும்?

விஜயகாந்த் அரசியல்
விஜயகாந்த்துக்கு எதிராக இப்படி செய்தபோது, சோஷியல் மீடியா அன்று இந்தளவுக்கு ஸ்டிராங் கிடையாது. ஆனால் இன்று விஜய்க்கு எதிராக திமுக சீண்டும்நேரம், சோஷியல் மீடியா வளர்ந்து விட்டது..விஜய் பக்கம் 2கே கிட்ஸ்களும் zen Gக்களும் உடனிருக்கிறார்கள்.
விஜய்க்கு எதிராக எவ்வளவு பிரச்சனையை தந்தாலும், லெப்ட் ஹேண்டில் டீல் செய்துவிட்டு போகிறார்கள்.. உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வெர்ச்சுவல் வாரியர்ஸ் வேலை பார்த்துட்டு இருக்காங்க.. இன்னும் அந்த எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது.
கோவை விவகாரம்
காசுக்காக வேலை பார்க்கும் சில யூடியூப் சேனல்கள், திமுகவுக்கு எதிராக ஒரு செய்தியை கூட போடுவதில்லை.. சமீபத்தில் நடந்த கோவை மாணவி விவகாரம் முதல் கொண்டு எதையுமே பேசாமல் திமுகவுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள், ஆனால் விஜய்யிடம் உள்ளது தன்னெழுச்சியான கூட்டம்,
ஒரே திமுக, ஒரே உதயசூரியன் என்று சொல்லி உருட்டி கொண்டிருக்கிறார்கள், இதெல்லாம் முடிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இப்போது திமுகவில் உள்ளவர்கள் முக்கால்வாசிப்பேர் அதிமுககாரர்கள்தான். பெயரளவுக்கு திமுக உள்ளது. பிடிஆர் போல நல்ல தலைவர் திமுகவில் இருந்தால் ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
போஸ்டர் ஒட்டுவதற்கும், கூட்டம் சேர்ப்பதற்கும்தான் திமுகவினரை பயன்படுத்துகிறார்கள்.. மற்றபடி, அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்குதான் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. 2026 தேர்தலில்
திமுக, அதிமுகவினரின் குடும்பத்திலிருந்தே விஜய்க்கு ஓட்டுப்போட போகிறார்கள்.. இவர்களது பஸ்ஸிலேயே வந்து தவெகவுக்கு ஓட்டு போட போகிறார்கள்.

விஜய் வளர்ந்துவிட்டார்
எந்தவொரு திமுக நிகழ்விலும் தவெக, விஜய் பெயரைகூட சொல்வதில்லை.. அந்தளவுக்கு விஜய்யை பார்த்து பயந்துகொண்டிருக்கிறார்கள்.. திமுக நிகழ்வுகளில் பெயரை சொன்னால், விஜய் வளர்ந்துவிடுவார் என்று நினைக்கிறார்கள்.. ஆனால், விஜய் எப்போதோ வளர்ந்து நிற்கிறார் என்பதையே இன்னும் அவர்கள் உணரவில்லை. தவெக வளர்ந்து இன்று திமுகவைவிட உயரமாக நின்று கொண்டிருக்கிறது.
எல்லா திமுக அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால், இதைத்தான் இனி மக்கள் மத்தியில் கொண்டு சென்று அம்பலப்படுத்துவோம். மகளிரை இழிவாக பேசிய பொன்முடிக்கு அதே பொறுப்பை ஏன் தந்துள்ளார்கள்? எதுக்காக பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? பிறகு ஏன் அதே பொறுப்பு வழங்கப்பட்டது?
கொளத்தூர் தொகுதி
கொளத்தூரில் மாநகராட்சி ஊழியர்கள் நிறைய பேர் உள்ளனர்.. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் யாருக்குமே இந்த அரசு எதுவுமே செய்யல. அவர்கள் எல்லாம் இந்த அரசு மீது கோபத்தில் உள்ளனர். கொளத்தூரிலேயே திமுக மண்ணை கவ்வும்.
எனவே, கோடிகளை கொட்டி நரேட்டிவ் செட்டிங் செய்து எவ்வளவுதான் விஜய்க்கு எதிராக திமுக செய்தாலும், தேர்தலில் தவெகதான் வெற்றி பெறும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications