பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்.. ஸ்டாலின் தலைமையில்.. ஆகஸ்ட் 13ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
சென்னை: திமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் வரும் 13ஆம் தேதி மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மு க ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திமுக அரசு தனது பட்ஜெட்டை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளது. அதற்கு மறுநாள் தமிழ்நாடு சட்டசபையில் முதல்முறையாக வேளான் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது ஆகஸ்ட் 13ஆம் தேதி சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்படும்.
இந்தச் சூழலில் திமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் வரும் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம், வரும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது?












Click it and Unblock the Notifications