திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் காலமானார்
சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி (வயது 53) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில வாரங்களாக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரியின் உடல் நிலை இன்று மதியம் கவலைக்கிடமாக இருந்தது. ஆனால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்ட போதிலும் இன்று இரவு 7.10 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மனைவியை இழந்து வாடும் ஆ ராசாவிற்கு திமுக தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் ஆறுதல் தெரிவித்தும், இரங்கல் தெரிவித்தும் வருகிறார்கள்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆ.ராசா அவர்களின் உயர்விலும் - தாழ்விலும், நெருக்கடிகளிலும் - சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி" என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில். கழகத் துணைபொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருமை சகோதரர் திரு.ஆ.ராசா M.P, அவர்களின் துணைவியார் திருமதி.பரமேஸ்வரி அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன், அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications