பாஜகவுக்கு விசுவாசம் காட்டுதா அதிமுக? நிர்மல் வழக்கு போட்டது ஏன்? பாயிண்டுகளை அடுக்கும் திமுக!
சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்துள்ள'உண்மை சரிபார்ப்புக் குழு'வுக்கு எதிராக அதிமுக நீதிமன்றப் படி ஏறியுள்ள நிலையில், அதிமுகவின் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி.
தவறான செய்திகளை கண்டறிவதற்காக தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் உண்மை சரிபார்ப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இயக்குநராக ஊடகவியலாளரும், உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் ஆசிரியராகச் செயல்பட்டவருமான ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உண்மை சரிபார்ப்புக் குழுவில் 80 பேர் இடம் பெற்று இருப்பார்கள் எனவும் இந்தக் குழுவின் Central Task Force தலைநகர் சென்னையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு எதிராக அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு குழுவை அமைத்து உத்தரவிட்ட அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், "காவல் துறைக்கு வெளியே உண்மை சரிபார்க்கும் குழு என்ற ஒன்றை அரசு அமைத்துள்ளது. அதற்கு அரசின் ஆதரவாளரான ஐயன் கார்த்திகேயன் திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியான திமுகவின் விருப்பத்திற்கு ஏற்பட செயல்படும் அவருக்கு மாத ஊதியமாக 3 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஊதியம் அரசின் எந்த அதிகாரிகளுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "வெளிப்படைத்தன்மை இல்லாத இந்த நியமனம் அரசின் கருவூலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய செயல் மக்களின் பேச்சு சுதந்திரம் மீதான தாக்குதல் என்பதோடு மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கும் செயலாகும். ஆகவே, உண்மை சரிபார்க்கும் குழு தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்கவும், அதன் இயக்குனராக ஐயன் கார்த்திகேயன் செயல்பட தடைவிதிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், அதிமுக தொடர்ந்துள்ள இந்த வழக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராஜீவ் காந்தி, "தமிழ்நாடு அரசு அண்மையில் உருவாக்கியுள்ள 'உண்மை சரிபார்ப்புக்குழு'வுக்கு எதிராக அ.இ.அ.தி.மு.க. கட்சி, வழக்கு தொடர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
1. வெறுப்புப் பேச்சு, வதந்திகள், பொய்த்தகவல்களால் பாதிக்கப்படுபவர்கள் எப்போதும் இஸ்லாமியர், கிறித்தவர், புலம்பெயர் தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மனிதர்கள்தான். இவர்களின் நலனில் ஒருபோதும் அக்கறை கொண்ட கட்சியாக அ.இ.அ.தி.மு.க. இருந்ததில்லை.
2. ஜனநாயகம் மற்றும் மத சுதந்திரம், வழிபாட்டு உரிமை ஆகியவற்றை ஒருபோதும் அ.இ.அ.தி.மு.க மதித்ததே இல்லை. மதமாற்ற தடுப்புச் சட்டம் கொண்டுவந்து சிறுபான்மையினரை அச்சுறுத்தியது அ.இ.அ.தி.மு.க அரசுதான்.
3. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான சிறு தெய்வ வழிபாட்டின் ஓர் அங்கமான ஆடு, கோழி ஆகியவற்றைப் பலியிட்டு பிரசாத உணவாக உட்கொள்வதை தடுப்புச்சட்டம் போட்டு நிறுத்தியது அவர்களின் அரசுதான்.
4. பத்திரிகை, தனிமனித சுதந்திரம் குறித்து வாயளக்கும் அ.இ.அ.தி.மு.க. அரசுதான் தமிழகத்தின் முக்கியமான அனைத்து பத்திரிகையாளர்களையும் அவதூறு வழக்குப் போட்டு நீதிமன்றங்களுக்கு இழுத்தடித்தது. அப்பொய் வழக்குகளை ரத்து செய்தது தற்போதைய தி.மு.க. அரசுதான் என்பதை அனைவரும் அறிவர்.
5. அ.இ.அ.தி.மு.க. கட்சியினர் ஒருபோதும் ஊடகங்களை மதித்த வரலாறு இல்லை. அவர்களது கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான மறைந்த ஜெ.ஜெயலலிதா, தேர்தலில் ஊடகங்களின் தாக்கம் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டபோது, "இப்போதெல்லாம் யார் பத்திரிகைகளைப் படிக்கிறார்கள்?" என்றும், "யாரும் பத்திரிகை படித்துவிட்டு ஓட்டுப்போடுவதில்லை" என்றும் பதில் அளித்தார். ஜனநாயகத்தின் நான்காவது தூணை அ.தி.மு.க. தலைமை மதித்த 'அழகு' அதுதான்.
6. மனிதர்களைத் தரம் பிரித்து பாகுபாடு காட்டும் சனாதன தர்மம் குறித்து தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் கொள்கை ரீதியிலான கருத்தைத் தெரிவித்தார். அதனை பா.ஜ.கவின் சங் பரிவாரம் இழிவான முறையில் எதிர்கொண்டது. அப்போது கள்ள மவுனம் சாதித்து, தனது பா.ஜ.க. விசுவாசத்தை அ.இ.அ.தி.மு.க. காட்டியது.
7. தற்போது 'திராவிடம்' குறித்த ஆளுநரின் கருத்து குறித்து சேலத்தில் செய்தியாளர் ஒருவர் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பழனிச்சாமி, "அதுகுறித்துப் பேசவேண்டுமென்றால் புராணம் படிக்கணும். அந்த அளவுக்கு நான் படிக்கவில்லை. ஆய்வு பண்ணினால்தான் திராவிடம் குறித்துத்தெரியவரும்" என்று சொன்னார். இன்றைக்கு ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் திராவிடக் கொள்கை குறித்து எதுவுமே தெரியாத ஒருவரைப் பொதுச்செயலாளராகக் கொண்ட கட்சி, 'சமூக நலனுக்காக, ஜனநாயகத்தைக் காக்க' பொதுநல வழக்கு தொடர்ந்திருப்பதாகச் சொல்வது நம்புகிற மாதிரியாகவா இருக்கிறது?
8. மக்கள் விரோத சட்டங்கள், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கைகளை இருகரம்கூப்பி வரவேற்பதில் அ.இ.அ.தி.மு.கவுக்கு இணையான கட்சி இந்தியாவிலேயே இல்லை எனலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானமா? அதிமுக ஆதரிக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டமா? அதிமுக ஆதரிக்கிறது. முத்தலாக் சட்டமா? அதிமுக ஆதரிக்கிறது. இதை விட அண்ணாவுக்குச் செய்யும் துரோகம் இருக்க முடியுமா? இதைவிடச் சிறுபான்மையினருக்கு வேறு துரோகம் செய்ய முடியுமா?" என்று குறிப்பிட்டார். இதைவிடப் பெரிய விளக்கம் தேவையிருக்கிறதா?
9. அண்மையில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி முறிந்ததாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், இது ஒரு நாடகம்தான் என்பதைத் தமிழ்
நாடு மக்கள் நன்கு அறிவார்கள். தற்போது, பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும் இணையத்தில் வெளியாகும் வெறுப்புச்செய்திகள், வதந்தி, பொய்ப்பிரச்சாரம் ஆகியவற்றைச் சரிபார்த்து, உரிய நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கும் 'உண்மை சரிபார்ப்புக் குழுவை' தமிழக அரசு அமைத்துள்ளது. அதன் இலக்கு இயக்குநராக நாடறிந்த 'உண்மை சரிபார்ப்புத்துறை வல்லுநர்' ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என்று அ.தி.மு.க.வின் இணைய பிரிவு இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
10. திடீரென்று கருத்து சுதந்திரம், ஜனநாயகத்தின்மீது அ.தி.மு.க கட்சிக்கு ஆர்வம் ஏற்பட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த ஆர்வத்தின் பின்னணியை உற்று நோக்கினால்தான் உண்மை புரியும். வெறுப்புப் பிரச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறியும் உண்மை சரிபார்ப்புக் குழுவை முடக்கப் பார்ப்பதன் மூலம் அ.தி.மு.க யாரை திருப்தியடைய முயல்கிறது என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாடு அரசு அண்மையில் உருவாக்கியுள்ள ‘உண்மை சரிபார்ப்புக்குழு’வுக்கு எதிராக அ.இ.அ.தி.மு.க. கட்சி, வழக்கு தொடர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
— R.Rajiv Gandhi (@rajiv_dmk) November 6, 2023
1, வெறுப்புப் பேச்சு, வதந்திகள், பொய்த்தகவல்களால் பாதிக்கப்படுபவர்கள் எப்போதும் இஸ்லாமியர், கிறித்தவர், புலம்பெயர்…
11. ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள், வெளி மாநிலத் தொழிலாளர், சிறுபான்மை சமூகத்தினரைக் குறிவைத்து நடத்தப்படும் வெறுப்புப் பிரச்சார விஷயங்களில் சங் பரிவாரங்கள்தான் ஆதார சக்தியாக இருந்து வருவதை வழக்குகள் அறியும். சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள். சங் பரிவாரத்தின் அரசியல் முகமான பா.ஜ.க இவ்வழக்கைத் தொடுக்கவில்லை. அவ்வாறு தொடுத்திருந்தால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசை விமர்சனம் செய்வதுபோல ஆகியிருக்கும்.
12. அந்த நெருக்கடியைத் தனது கொள்கைப் பங்காளியான (ideological partner) பா.ஜ.கவுக்குக் கொடுக்க அ.தி.மு.க விரும்பவில்லை. எனவே, தன் பெயரில் வழக்கு தொடுத்து தன் எஜமான விசுவாசத்தைக் காட்டுகிறது. இதன் மூலமாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான முன்னெடுப்பை அ.இ.அ.தி.மு.க. எடுத்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அந்த அறிவை திராவிடமும் பொதுவுடமை சித்தாந்தமும் சுயமரியாதை இயக்கமும் தமிழர்களுக்கு எப்போதோ தந்துவிட்டது!" எனத் தெரிவித்துள்ளார்.
-
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications