டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு ரெடி.. குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையது! 4 அபார்ஷன் பண்ண சொன்னாரே: ஜாய் ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்ஏ சோதனையில் குழந்தை தன்னுடையது என நிரூபிக்க வேண்டும் என தான் வெளியிட்டிருந்த பரபரப்பு அறிக்கையில் மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.. இந்நிலையில், தனக்கு பிறந்த குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ்தான் என நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு தயார் என்று ஜாய் கிரிசில்டா அதிரடியாக அறிவித்துள்ளார்.

மிக மிக குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றவர் மாதம்பட்டி ரங்கராஜ்.. ஆனால், அதே வேகத்தில் சர்ச்சைகளிலும், சலசலப்பிலும், அதுதொடர்பான நீதிமன்ற வழக்குகளிலும் சிக்கி உள்ளார்..

DNA Test Mathampatti Rangaraj Joy

தன்னை காதலித்து திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக, மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல சினிமா காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸில்டா புகார் சொன்னார். தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வரை சென்றுள்ளார்.. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்... அத்துடன் முகத்தை மறைத்து குழந்தையின் போட்டோவையும், மாதம்பட்டி ரங்கராஜின் போட்டோவையும் சேர்த்து தொடர்ந்து போஸ்ட் போட்டு வருகிறார்கள்.

ஜாய் கிரிஸில்டா

இந்நிலையில், நேற்றைய தினம் மீண்டும் ஒரு பரபரப்பு போஸ்ட்டை ஜாய் பதிவிட்டிருந்தார்.. அதில், "என் குழந்தையின் அப்பா, நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை என்றும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று கூறியிருந்தார்.

ஆனால், ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதற்காகவே ஒரு பிரத்யேக அறிக்கையும் மாதம்பட்டி வெளியிட்டுள்ளார்.

மகளிர் ஆணையம்

அதில், "மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.

செப்டம்பர் 2025ல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.

மாதம்பட்டி ரங்கராஜ்

நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் (DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை.

DNA பரிசோதனை

அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதில், டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தை தன்னுடையது தான் என நிரூபிக்க வேண்டும்" என்று அறிக்கையில் கூறியிருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்

குழந்தை என்னுடையது என நிரூபணமானால் வாழ்நாள் முழுவதும் குழந்தையை பராமரித்து கொள்ள தயார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் சொல்லவும், இதற்கு ஜாய் கிரிசில்டா பதிலடி தந்துள்ளார்..

டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு ரெடி

செய்தியாளர்களிடம் பேசிய ஜாய், "டிஎன்ஏ பரிசோதனை செய்து குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூக்குத் தான் பிறந்தது என நிரூபிக்க தயார்.. அவர், டிஎன்ஏ பரிசோதனை வேண்டாம் எனக்கூறிவிட்டு இப்போது சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை விட்டுள்ளார்.

எனக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு தயார். மகளிர் ஆணைய விசாரணையின்போது டிஎன்ஏ சோதனைக்கு நான்தான் முதலில் வற்புறுத்தினேன். மிரட்டி திருமணம் செய்து கொள்வதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தையா என்ன?

NICUவில் குழந்தை - மனசாட்சி இல்லையா

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தார் மிகுந்த மனவலியை கொடுக்கின்றனர். குழந்தை என்ஐசியூவில் (NICU) உள்ள நிலையில் இதுபோன்ற அறிக்கை தேவையா? மாதம்பட்டி ரங்கராஜூக்கு மனசாட்சி இல்லையா?

குழந்தை அவருடையது என்பதை ரங்கராஜ் ஒப்புக் கொண்டார்.. 4 முறை கருவை கலைக்க வற்புறுத்தினார். மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த அழுத்தத்தினால் முன்கூட்டியே பிரசவம். எனது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் DNA சோதனைக்கு வர வேண்டும். யாருடைய பின்புலத்தில் ரங்கராஜ் நடந்து கொள்கிறார் என தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+