வாட்ஸ் ஆப்பில் இந்த கால் வந்தால் மட்டும்..எடுக்கவே எடுக்காதீங்க! சென்னை சைபர் க்ரைம் போலீஸ் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாட்ஸ் ஆப்பில் வரும் வீடியோ கால்கள் குறித்து முக்கியமான எச்சரிக்கை ஒன்றை சென்னை சைபர் க்ரைம் போலீசார் விடுத்துள்ளனர்.

பேஸ்புக் பெரும் இழப்பை சந்தித்து வரும் நிலையில், மார்க் தன்னுடைய மார்க்கை வாட்ஸ் அப் பக்கம் திருப்பி இருக்கிறார் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு வாட்ஸ் அப் புதிய அப்டேட்களை அள்ளி வழங்குகிறது.

Do not attend these video calls from Whats app numbers says Chennai Cyber police

உலகில் மக்கள் பயன்படுத்தும் ஒரே மெசேஜிங் அப்ளிகேஷன் வாட்ஸ் ஆப் மட்டுமே என்ற நிலையை ஏற்படுத்தத்தான், வாட்ஸ் ஆப் குழு செயல்பட்டு வருகிறது. அதற்காகவே வாட்ஸ் ஆப்பின் ''ஆர் அண்ட் டி'' குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் வீடியோ கால், வாட்ஸ் ஆப் கால் வசதிகளில் அது பெரிய அளவில் முன்னேறவில்லை. சில போட்டி ஆப்கள் அதில் பெரிய சாதனை படைத்துள்ளது. அதை முறியடிக்கவே வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பல புதிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

வாட்ஸ் ஆப் வீடியோ கால்: வாட்ஸ் ஆப்பில் வரும் வீடியோ கால்கள் குறித்து முக்கியமான எச்சரிக்கை ஒன்றை சென்னை சைபர் க்ரைம் போலீசார் விடுத்துள்ளனர். தற்போதெல்லாம் வாட்ஸ் ஆப் மூலம் முறைகேடுகள் அதிகம் நடக்கின்றன.

திடீரென தெரியாத நம்பரில் இருந்து வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் வரும். அதை எடுத்தால் அதில் எதுவும் இருக்காது. அடுத்த சில நிமிடங்களில் நாம் பெண் ஒருவருடன் வாட்ஸ் ஆப்பில் நிர்வாணமாக வீடியோ கால் பேசியதாக மார்ப் செய்யப்பட்ட புகைப்படங்கள் உங்கள் போன் மெசேஜுக்கு வரும். குறிப்பிட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அதை உங்கள் உறவினர்களுக்கு அனுப்புவோம் என்றும் கூட இதில் மிரட்டல் விடுப்பார்கள்.

போலீஸ் எச்சரிக்கை: இந்த நிலையில்தான் வாட்ஸ் ஆப் மூலம் மோசடி செய்யும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கியமாக உங்கள் காண்டாக்ட்டில் இல்லாத, உங்களுக்கு தெரியாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் தமிழ்நாடு போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். முக்கியமாக பலர் நிர்வாண வீடியோ கால் செய்து பணம் பறிப்பதாகவும் போலீசார் இந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஏஐ மோசடி: இது போக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் செய்யப்படும் முறைகேடுகள் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏஐ மூலம் வாட்ஸ் ஆப் வீடியோ கால் செய்யப்படுகிறது. இதில் நிர்வாண கால்கள் செய்யப்படுகின்றன. இன்னும் சில இடங்களில் ஏஐ குரலில் உங்கள் உறவினர்கள், குடும்பத்தினர் போல குரல் மாற்றி பேசி பணம் கேட்கும் வழக்கமும் அதிகரித்து உள்ளது.

இதை நம்பி பலர் பணம் பறிக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் இதுபோன்ற வாட்ஸ் ஆப் கால்கள் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். வாட்ஸ் ஆப் மோசடிகள் குறித்து சைபர் கிரைமின் 1930-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்க மக்களுக்கு போலீசார் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+