Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனவ நண்பர்களே.. துரும்பை கூட கிள்ளிப்போடல திமுக.. லிஸ்ட் அடுக்கிய டாக்டர் ராமதாஸ்.. முக்கிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனவர்களின் நலனுக்காக இதுவரை துரும்பைக் கூட கிள்ளிப்போடாதது திமுக - காங்கிரஸ் கூட்டணி தான். அந்தக் கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் மீனவ நண்பர்களிடம் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு 12 சதவீதம் ஓட்டு வங்கி இருக்கிறது.. எனவே தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதிலும் மீனவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்திருக்கிறது.

Do not vote for DMK AIADMK parties in the Lok Sabha Election 2024 PMK Founder Dr Ramadoss

மீனவர்கள்: சென்னையிலும்கூட, மீனவ கிராமங்கள அதிகமாக உள்ளன.. தென்சென்னையை எடுத்துக்கொண்டால், நொச்சிக்குப்பம் முதல் பனையூர் வரை 50 மீனவ கிராமங்கள் உள்ளன... எனவே, இந்த தென்சென்னையில் மட்டும் 20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.. இவர்களில் இரண்டரை லட்சம் பேர் மீனவர்கள் ஆவர். எனவேதான், மீனவ நண்பர்களின் வாக்கு வங்கியையும் அரசியல் கட்சிகள் பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார்கள்.

அந்தவகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் மீனவ நண்பர்களின் பேராதரவை கோரியுள்ளார்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவடைவதால், வாக்குகள் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்:

முடிவுகள்: தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் உங்கள் வாக்குகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ்நாட்டு அரசியலில் உங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் யார், உங்களுக்கு ஆதரவாக இருப்பதைப் போல நடிப்பவர்கள் யார்? என்பதை ஆய்வு செய்து நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

மீனவர்கள் தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதில் மீனவர்களுக்கு ஆதரவான முதல் குரல் என்னிடமிருந்து தான் வரும். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டாலும், தாக்கப்பட்டாலும், இலங்கை கடல் கொள்ளையர்களால் மீனவர்களின் உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்டாலும் அதைக் கண்டித்து முதல் அறிக்கை வெளியாவது என்னிடமிருந்து தான்.

அழுத்தம்: மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் அறிக்கை வெளியான பிறகு தான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவார். கடிதம் எழுதி விட்டு மீனவர்கள் பிரச்சினையை கைகழுவியதைத் தவிர வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொண்டதில்லை. தமிழகத்தின் பிற கட்சிகளோ மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசியதே இல்லை.

கச்சத்தீவு: தமிழக மீனவர்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்துக் கொடுமைகளுக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தான் காரணம் ஆகும். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ், திமுக ஆகிய இரண்டுமே குற்றவாளிகள் தான். கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர், தெரிந்தே அனுமதித்தார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை இந்திரா தலைமையிலான மத்திய அரசு எடுத்த போது கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் தான்.

கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி இலங்கையிலும், 28 ஆம் தேதி தில்லியிலும் கையெழுத்திடப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காரணம் .... தன் மீதான ஊழல் வழக்குகளில் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து விடும் என்ற அச்சம் தான்.

மீனவர்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 800-க்கும் கூடுதலான மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கும் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தான் காரணம். அதற்கு காரணமானவர்களை எந்தக் காலத்திலும் நீங்கள் மன்னிக்கக் கூடாது.

அதே நேரத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. கச்சத்தீவை மீட்பதற்காக இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் கச்சத்தீவுக்கு புறப்பட்ட போது தமிழக அரசால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டவன் இந்த இராமதாசு.

அரசியல் அங்கீகாரம்: அதுமட்டுமின்றி மீனவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் அளித்ததும் பா.ம.க. தான். புதுவையில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் இராமதாஸ் அவர்களை மக்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்ததும் பாட்டாளி மக்கள் கட்சி தான்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால், மீனவர்களை பழங்குடியினராக அறிவிப்போம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், அதற்காக இதுவரை துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

என்ன காரணம்: இவ்வளவுக்கும் காரணம் திமுக - காங்கிரஸ் கூட்டணி தான். அந்தக் கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கக் கூடாது; உங்களுக்கு துரோகம் செய்தவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். உங்களுக்காக குரல் கொடுத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+