இன்று இரவிற்குள்.. இந்த 10 விஷயங்களை உடனே செய்யுங்கள்.. உங்கள் வருமானத்தில்.. பல லட்சம் சேமிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிதியாண்டு (2024-25) மார்ச் 31 இன்றுடன் முடிவடைகிறது. இன்று இரவிற்குள் நீங்கள் வேகமாக சில முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் பல லட்சங்களை சேமிக்க முடியும்.

உங்களுக்கு முதலீடுகள் அதிகம் உள்ள பட்சத்தில்.. வருமானமும் மாதத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் புதிய வருமான வரிக்கு பதிலாக பழைய முறையை பின்பற்றலாம். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு வாடகைக்கான மூலத்தில் பெறப்படும் வரிகான (டிடிஎஸ்) வருடாந்திர வரம்பை தற்போதைய ₹2.4 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்துவதாக உத்தரவிட்டுள்ளார்.

Do these 10 things by today night itself to save lakhs of rupees in Income tax returns

ஒருவர் வாங்கும் வாடகை மாதத்திற்கு ₹50,000க்கு மேல் இருந்தால் மட்டுமே இனி அதற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும். அதாவது வருடத்திற்கு 6 லட்சம் வரை வாடகை வருமானம் இருந்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டியது இல்லை.

பழைய முறையை பின்பற்றி சேமிப்பு

இப்படி பழைய முறையை பின்பற்றுபவர்கள் இன்றுக்குள் இந்த 10 முதலீடுகளை செய்தால், நடவடிக்கைகளை எடுத்தால்.. பல லட்சங்களை சேமிக்க முடியும்.

சம்பளதாரர்களின் பெரும்பாலான முதலீடுகள், சேமிப்புகள் மற்றும் வரி நடவடிக்கைகள் நிதியாண்டுடன் நேரடியாக தொடர்பு கொண்டது. ஒவ்வொரு ஆண்டும், நாம் செய்யும் முதலீடுகளை பொறுத்து நம்முடைய வரியை சேமிக்க முடியும். கீழே கொடுக்கப்பட்ட உள்ள பணிகளை இன்று இரவிற்குள் செய்து முடிப்பதன் மூலம் உங்கள் வருமான வரிகளில் இருந்து நீங்கள் பல ஆயிரம் முதல் லட்சம் வரை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் அபராதங்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கலாம்.

1. பழைய வருமான வரி முறையை பின்பற்ற போகிறீர்கள்.. அதை அடிப்படையாக வைத்து ஏப்ரல் 1க்கு பின் ITR தாக்கல் செய்ய போகிறீர்கள் என்றால்.. உங்களுக்காக பல சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன - ELSS பரஸ்பர நிதிகள், PPF, EPF, NSC, வரி-சேமிப்பு FDகள் மற்றும் பல திட்டங்கள் உள்ளன. அவை பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு பலன்களை உங்களுக்கு வழங்கும். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பலன்களைப் பெறலாம். இதை கணக்கு காட்டி ITRல் பல விலக்குகளை பெற முடியும்.

2. . வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு பின் தாக்கல் செய்தால் refund கிடைக்காது என்ற வதந்தி கடந்த சில நாட்களாக பரவி வந்தது. புதிய வருமான வரி சட்டத்தில் இந்த விதி சேர்க்கப்பட்டதாக பொய்யாக செய்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் அப்படி எந்த விதியும் சேர்க்கப்படவில்லை. வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு பின் தாக்கல் செய்தாலும் refund கேட்கலாம். முந்தைய வருமான வரி சட்டத்தில் இந்த விதி உள்ளது. அதே விதி புதிய வருமான வரி சட்டத்திலும் தொடரும் என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

3. ஒருவேளை நீங்கள் 80C ஐ முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால், மேலும் வருமான வரி விலங்குகளை பெற விரும்பினால் பிரிவு 80CCD(1B) இன் கீழ் ரூ.50,000 கூடுதல் விலக்கு விருப்பத்தைப் பெற NPSக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது தேசிய பென்ஷன் சிஸ்டத்தில் முதலீடு செய்வது.

4. உங்களின் மொத்த வரிப் பொறுப்பு அதாவது total tax liability (டிடிஎஸ் தவிர) ரூ.10,000க்கு அதிகமாக இருந்தால், மார்ச் 31க்குள் நீங்கள் முன்கூட்டிய வரியைச் செலுத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் வட்டி மற்றும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

5. இன்றைய காலகட்டத்தில் உடல்நலக் காப்பீடு மிகவும் முக்கியமானது. இதை வைத்து நீங்கள் உங்களை காக்க முடியும். வரியையும் குறைக்க முடியும். நீங்கள், குடும்பத்தினர் மற்றும் பெற்றோருக்காக வாங்கிய பாலிசியில் ரூ.75,000 வரையிலான வரி விலக்கு பலனைப் பெற உடல்நலக் காப்பீடு உதவும்.

Take a Poll

6. நீங்கள் சமீபத்தில் ஒரு சொத்தை விற்று இருந்தால் உங்களுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியை விதிப்பார்கள். இதை தவிர்க்க விரும்பினால், மார்ச் 31க்கு முன் NHAI அல்லது REC இன் 54EC பத்திரங்களில் ₹50 லட்சம் வரை முதலீடு செய்யுங்கள். இந்த முதலீடு மூலம் உங்கள் நில மதிப்பை பொறுத்து பல லட்சங்களை சேமிக்கலாம்.

7. 2023-24 நிதியாண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட ஐடிஆரில் ஏதேனும் தவறு இருப்பதால், அதை மார்ச் 31, 2025 வரை சரிசெய்யலாம். இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டால், கடுமையான அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.

8. நீங்கள் வாடகை வீட்டில் வசித்து, HRA இன் பலனைப் பெற விரும்பினால், மார்ச் 31-ஆம் தேதிக்குள் உங்கள் நிறுவனத்திடம் வாடகை ரசீதைக் கொடுங்கள்.

9. அதேபோல், நீங்கள் விடுமுறையின் போது பயணம் செய்து LTAவைப் பெற விரும்பினால், பயண டிக்கெட்டுகள் மற்றும் பிற ஆவணங்களை சரியான நேரத்தில் உங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்கவும்.

10. உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், மார்ச் 31 ஆம் தேதிக்குள் அதைச் செய்து முடிக்கவும். இல்லையெனில் உங்கள் PAN செயலிழந்து போகலாம், இது வங்கி மற்றும் நிதிப் பணிகளில் சிக்கல்களை ஏற்படுத்தும். வருமான வரி தாக்கல் செய்யவும் சிக்கல் ஆகும்.

பழைய வருமான வரி ஸ்லாப் என்னென்ன?


நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும்.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+