பேங்க் அக்கவுண்ட் இருக்கா? ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா? மீண்டும் "சுழலும்" ரூ.500 நோட்டு கட்டுகள்.. உஷார்
சென்னை: ஐசிஐசிஐ வங்கியின் பெயரை பயன்படுத்தி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. யாரந்த மோசடிப்பேர்வழிகள்? அதென்ன வீடியோ?
எந்த அளவுக்கு டிஜிட்டல் முறையில் மிக எளிதாக, வசதியாக பணப்பரிவர்த்தனை இருக்கிறதோ, அந்த அளவுக்கு மோசடிகளும் அதிகமாகவே நடந்த வருவது கவலைக்குரியதாக உள்ளது. இதுபோன்ற மோசடிகளால், பெரும்பாலும் பாதிக்கப்படுவது மிகப்பெரிய வங்கி நிறுவனங்கள்தான்.. இதற்கு ஐசிஐசிஐ வங்கியும் விதிவிலக்கல்ல.

மோசடி: அதனால்தான், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பலமுறை ஐசிஐசிஐ வங்கி, மோசடி தொடர்பாக அலர்ட் செய்தபடியே இருக்கிறது.. ஆன்லைன் மூலம் பண பரிமாற்றம் செய்யும்போது என்னென்ன மோசடி நடைபெறும் என்பது குறித்து எச்சரிக்கை செய்வதுடன், விழிப்புணர்வுகளையும் அவ்வப்போது தந்து கொண்டே இருக்கிறது.. ஐசிஐசிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்கள் தற்போது நூதன முறையில் நடந்து வரும் மோசடி குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதாவது, வங்கி வாடிக்கையாளர்களின் சமூக வலைதளங்களை ஹேக் செய்யும் மோசடியாளர்கள், தங்கள் நண்பர் மற்றும் உறவினர்கள் கேட்பதுபோல் சமூக வலைதளங்கள் மூலமாக பணம் கேட்கிறார்களாம்.. நமக்கு தெரிந்த ஒருவர் தான் பணம் கேட்கிறார் என்று சோஷியல் மீடியாவில் தோன்றும் மெசேஜ்ஜை வைத்து உடனடியாக சிலர் பணம் அனுப்பி விடுகிறார்கள்.. ஆனால் அதன்பிறகு தான் அந்த சமூக வலை தளங்கள் ஹேக் செய்யப்பட்டு பண மோசடி செய்திருப்பது பலருக்கு தெரிய வருகிறது.
ஐசிஐசிஐ வங்கி: அதனால்தான், ஃபேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பணம் கேட்டால் உடனடியாக அவர்களை போனில் தொடர்பு கொண்டு, அவர்களின் பணத்தேவையை உறுதி செய்துகொண்டு, அதற்கு பிறகே பணத்தை அனுப்புமாறு ஐசிஐசிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது.
அதுமட்டுமல்ல, வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை விவரங்கள், செல்போன் நம்பர்கள், முகவரிகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு நம்பர்கள், சிவிவி எண்கள், பிறந்த தேதிகள், தாய் தந்தையின் பெயர்கள், பாஸ்போர்ட் எண்கள் போன்றவற்றை வங்கிகள் ஒருபோதும் கேட்காது.. அதனால், இவைகளை கேட்டு வரும் மெசேஜ்கள் மற்றும் மெயில்களை டெலிட் செய்துவிட வேண்டும் என்றும் ஐசிஐசிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே அலர்ட் செய்திருக்கிறது
மோசடிகள்: இவ்வளவுசெய்தும்கூட, வங்கியின் பெயரை குறிப்பிட்டு மற்றொரு மோசடி நடந்துள்ளது.. அதாவது, வங்கி ரூபாய் நோட்டு கட்டுகள் தொடர்பான பழைய வீடியோ மற்றும் தகவல்கள் மறுபடியும் இணையத்தில் வலம் வரத்தொடங்கியிருக்கிறது..
இது தொடர்பான அந்த வீடியோவில், இரண்டு நபர்கள், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் கொண்ட ஒரு பண்டலை பிரிக்கிறார்கள்... அதில், ஓரங்களில் உள்ள 2 பண்டல்களிலும் உள்ள தலா ஒரு நோட்டு தவிர, உள்ளே இருக்கும் எல்லா நோட்டுகளுமே வெள்ளை பேப்பர்களாகவே இருந்தன.. அந்த ரூபாய் நோட்டு கட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பெயரிலான சிலிப் ஒன்றும் தென்பட்டது.
ரூபாய் நோட்டு: வங்கியில் இருந்து மொத்தமாக பணம் எடுத்தபோது போலி ரூபாய் நோட்டு பண்டலை கொடுத்து பெரிய மோசடி நடைபெறுகிறது என்று இந்த வீடியோவை ஷேர் செய்தவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்..
இதையடுத்து, வங்கியில் இருந்து பெறக்கூடிய பண்டல் நோட்டுகளை அவர்களிடமே பிரிக்கச்சொல்லி சரிபார்த்து வாங்கவேண்டும் என்றும் பணம் வாங்கும்போது மிகுந்த கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
வீடியோ: இதே வீடியோதான், கடந்த ஏப்ரல் மாதமும் சோஷியல் மீடியாவில் பரவியிருக்கிறது.. இதைப்பார்த்த பதறிய ஐசிஐசிஐ வங்கி, இதற்கு உடனடியாக விளக்கம் ஒன்றை அளித்திருந்தது..
அதில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, தங்களின் லோகோ மற்றும் பெயரை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் இந்த வீடியோவை உருவாக்கியிருப்பதாகவும், இந்த வீடியோவை தங்கள் லோகோவுடன் பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனாலும், இதே வீடியோ இப்போது மறுபடியும் இணையத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
உஷார் மக்களே: பலமுறை ஃபார்வர்டு செய்யப்பட்ட தகவல்களை குரூப்பில் ஷேர் செய்து, மற்றவர்களை குழப்புவதையே, சிலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.. அப்படித்தான், இந்த வங்கி ரூபாய் நோட்டு கட்டுகள் தொடர்பான பழைய வீடியோ மற்றும் தகவல்கள் மீண்டும் வலம் வரத்தொடங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications