காற்று பிஎஸ்என்எல் பக்கம் வீசுதே.. சிம் வாங்க கூட்டமாக குவியும் மக்கள்.. ஒரே நாளில் 3 லட்சம் சேல்ஸ்
சென்னை: ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து பலரும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற ஆர்வம் காட்டி வருகிறார்கள். பிஎஸ்என்எல் சிம்மை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று குவிந்து வருகிறார்கள். இவர்களின் ஆர்வத்தை கண்டு உற்சாகமான பிஎஸ்என்எல் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் சொல்லி வைத்தார் போல், நாட்டில் மூன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான, ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை ஃப்ரிப்பெய்டு திட்டங்களுக்கு 25 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தின.

ஏர்டெல்லை பொறுத்தவரை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 179-ல் இருந்து ரூ. 199-ஆக உயர்ந்தது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 455-ல் இருந்து ரூ. 509 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக ஒரு வருட வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 2999-ல் இருந்து ரூ. 3599-ஆக உயர்ந்திருக்கிறது.
ஜியோவை பொறுத்தவரை 2 ஜிபி டேட்டா உடன் 28 நாள்கள் வரை நீடிக்கும் 155 ரூபாய் பேக், 189 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தினம்தோறும் 2 ஜிபி டேட்டா வழங்கும் 299 ரூபாய் ரீசார்ஜ் பேக், 349 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
399 ரூபாய் 3 ஜிபி டேட்டா பேக் 449 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு மாத பிளான்களை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா உடன் கூடிய 479 ரூபாய் பேக் 579 ரூபாயாகவும், 2 ஜிபி டேட்டா உடன் கூடிய 533 ரூபாய் பேக் 629 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மூன்று மாத பிளானில் 6 ஜிபி டேட்டா கொண்ட 395 ரூபாய் பேக் 479 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் 28 நாட்கள் வேலிடிட்டி காண்ட ரூ.179 பிளானை ரூ.199க்கு உயர்த்தி உள்ளது.
ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் கூடிய பிரபலமான 84 நாள் வேலிடிட்டி திட்டத்தின் விலையை ரூ.719ல் இருந்து ரூ.859க்கு உயர்த்தியுள்ளது.
இப்படி மூன்று தனியார் நிறுவனங்களும் சொல்லி வைத்தார் போல் கட்டணங்களை உயர்த்திய நிலையில் பிஎன்என்எல் பக்கம் மக்கள் வேகமாக மாறுகிறார்கள்.
பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் நாட்டின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல்லை விடவும் மிகவும் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
இதன் காரணமாக நாடு முழுவதும் வேகமாக பலரும் ஜியோ, ஏர்டெல்லை விட்டு வெளியேறி பிஎஸ்என்எல்க்கு மாறி வருகிறார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 630 பேர் புதிதாக பிஎஸ்என்எல் சேவைக்கு மாறி உள்ளார்கள். பலரும் பிஎஸ்என்எல் சிம் வாங்கினால் தான் தப்பிக்க முடியும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு வீட்டில் நான்கு பேர் செல் வைத்திருந்தால், அதற்காக கட்டணமாக ஆயிரக்கணக்கில் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தான் பலரும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற ஆர்வம் காட்டுகிறார்கள். சிம் வாங்க இரவு வரை எல்லாம் சில இடங்களில் காத்திருக்கிறார்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் சிம் வாங்கிக்கொண்டு தான் செல்வோம் என்று மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்..
மக்கள் திடீரென இப்படி ஆர்வம் காட்ட காரணம், பிஎஸ்என்எல் அந்த அளவிற்கு சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. அவற்றில் சில பிரபலமான திட்டங்களை பற்றி பார்ப்போம். ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் கால் , ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 30 நாட்களுக்கு பிஎஸ்என்எல் வழங்குகிறது.
அதேபோல் ரூ.249 பிளான் படி, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகளுடன் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 45 நாட்களுக்கு பெற முடியும். இந்த திட்டம் தான், பலரையும் ஏர்டெல் மற்றும் ஜியோவில் இருந்து விலகி பிஎஸ்என்எல் சிம்முக்கு மாற தூண்டுகிறது.
ஸ்மார்ட்போன் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு உதவியாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.107 திட்டத்தை வழங்கி வருகிறது. இதில் 200 நிமிட கால் வசதியும், 35 நாட்களுக்கான 3GB டேட்டாவையும் வழங்குகிறது. அதேநேரம் அன்லிமிடெட் கால் வசதி வேண்டும் என்றால் ரூ.153 பிளான் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் 26 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் உடன், 26 GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-ஐ பெற முடியும்.
ரூ. 347 பிளான் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியுடன் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 54 நாட்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தருகிறது. இதேபோல் ரூ. 599 பிளான்படி அன்லிமிடெட் கால் வசதியுடன், 100 இலவச எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை 84 நாட்களுக்கு தருகிறது.
666 பிளான் திட்டத்தில் அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 GB டேட்டாவை 105 நாட்களுக்கு பெற முடியும். ரூ.997 பிளான் திட்டத்தில் அன்லிமிடட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை 160 நாட்களுக்கு பெற முடியும். ஒரு வருடத்திற்கு என்றால், ரூ.2,399 பிளான் திட்டத்தில் சேர்ந்தால் அன்லிமிடட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, 100 SMS ஆகியவற்றை 395 நாட்களுக்கு பெற முடியும். இன்னும் பல சிறப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றை சென்னை பிஎஸ்என்எல் அலுவலகம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications