வெறும் ரூ.500 கட்டி.. தபால் அலுவலக சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.. போஸ்ட் ஆபீஸ் ஸ்கீமின் பெஸ்ட் பலன்கள்
சென்னை: தபால் நிலைய சேமிப்புகளில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்ட என்ன காரணம்? போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தை எப்படி துவங்குவது?
பணத்தை சரியான வகையில் முதலீடு செய்வதன் மூலம், மிகப்பெரிய பலனை ஈட்ட முடியும்... நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது அதிக ஆபத்து இல்லாத முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனினும், அதனைவிட போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது, கூடுதல் பலனை தருகிறது.

உத்தரவாதம்: அதனால்தான், உத்திரவாதமான லாபத்தை அளிக்கும் வகையிலான பல்வேறு சேமிப்பு திட்டங்களை நம்முடைய அஞ்சலகங்கள் செயல்படுத்தி வருகின்றன.. பொதுமக்களின் நன்மதிப்பையும், வரவேற்பையும் அஞ்சலக திட்டங்கள் எப்போதுமே பெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல், அரசு ஆதரவு பெற்ற தபால் நிலைய திட்டங்கள் எப்போதுமே பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் உள்ளன.
தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் ஏராளமான திட்டங்கள் உள்ளன.. குறிப்பாக, 5.5 சதவீதம் முதல் 7.6 சதவீதம் வரை வட்டி கிடைக்ககூடிய சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை சொல்லலாம். இந்த திட்டத்தின் கீழ் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகள் பெயரில் கணக்கு தொடங்கலாம். இதில் 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். குறைந்தபட்சமாக 250 ரூபாய் மட்டும் செலுத்தினால், அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
சீனியர் சிட்டிசன்: அதேபோல, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தையும் சொல்லலாம். இந்த திட்டத்தில் 7.4 சதவீதம் ஆண்டு வட்டிக்கு கிடைப்பதற்கு உத்தரவாதம் உள்ளது. 60 வயதுக்கு மேலுள்ள அனைவருமே இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். டெபாசிட் செய்யும்போது 1000, 2000, 3000 என்று ஆயிரக்கணக்கில்தான் டெபாசிட் செய்யமுடியும் என்றாலும், அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
அதேபோல, பொது வருங்கால வைப்புநிதித் திட்டத்தையும் குறிப்பிடலாம். இந்த திட்டத்தில் இப்போது வருடத்துக்கு 7.1 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ.500, அதிகபட்ச டெபாசிட் தொகை ரூ.1.5 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணக்கு தொடங்கி அடுத்த 15 வருடங்களில இந்தக்கணக்கு முதிர்வு அடையும்.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கை எப்படி துவங்குவது? இதற்கான தகுதிகள் என்னென்ன?
வயது வந்த ஒரு நபர் தனியாகவோ அல்லது 2 நபர்கள் கூட்டாகவோ சேமிப்பு கணக்கை திறக்கலாம். மைனர் சார்பாக அவரது பாதுகாவலர் கணக்கை திறக்கலாம்.. 10 வயதிற்கு மேற்பட்ட ஒரு மைனர், தன்னுடைய பெயரிலேயே தபால் அலுவலக சேமிப்புக் கணக்கைத் திறக்க முடியும். ஆனால், ஒரு தனிநபரால் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும்.
அபராதம்: ஒரு தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ.500 ஆகும்.. இந்த தொகை கணக்கில் வைக்காவிட்டால், ஒவ்வொரு நிதியாண்டின் கடைசி நாளிலும் ரூ.100 அபராதம் பிடிப்பார்கள். ஒருவேளை அந்த கணக்கில் பணமே இல்லாவிட்டால் அந்தக் கணக்கு மூடப்பட்டுவிடும். குறைந்தபட்சமாக ரூ.50 வித்டிரா செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.
உங்கள் வீட்டுக்கு பக்கத்திலுள்ள போஸ்ட் ஆபீசுக்கு சென்று இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்தியா போஸ்ட் வெப்சைட்களிலும் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கின்றன.
ஆவணங்கள்: விண்ணப்பத்தை பிழையில்லால் பூர்த்தி செய்து, அத்துடன் kyc ஆவணங்கள், பாஸ்ட் போர்ட் சைஸ் போட்டோக்களையும் இணைத்து, தபால் நிலையத்தில் வழங்க வேண்டும். கணக்கு ஆரம்பிக்கப்பட்டதுமே நெட் பேங்கிங் சேவையையும் பெற்றுக்கொள்ளலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications