உயில் இல்லாமல் சொத்தை பிரிக்க முடியுமா? இறந்தவர்களின் சொத்தை மீட்பது எப்படி? இந்த ஆவணங்கள் கட்டாயம்
சென்னை: குடும்பத்தில் எதிர்பாராத மரணங்கள் ஏற்பட்டு, நம்மை நிலைகுலைய வைத்துவிடும்.. அதிலும் குடும்பமே அந்த நபரை நம்பி வாழும் சூழலில், அவர் திடீரென இறந்துவிடும்போது, அந்த கடினமான சூழலை எதிர்கொள்வது மிகவும் கடினம்.. இறந்த நபரின் சொத்துகள், கணக்கு விவரங்கள், கடன்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி பலரும் அறியாமலேயே இருந்திருப்பார்கள்.. அப்படியே இதுகுறித்து தெரிந்திருந்தாலும், அவைகளை எப்படி மீட்பது? என்ற குழப்பமும் இருக்கும். இதுகுறித்து சுருக்கமாக பார்ப்போம்.
குடும்பத்தில் எதிர்பாராமல் ஒருவர் மரணிக்க நேர்ந்தால், அவரது சொத்துக்களை எப்படி மீட்பது? இறந்தவரின் சொத்து: இறந்தவர்களுடைய சொத்துகளை மீட்க வேண்டுமானால், இறந்தவரின் பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் பற்றியும், அவருக்கு தனி அல்லது ஜாயின்ட் அக்கவுண்ட் உள்ளதா? என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தால் நல்லது.

அதேபோல, இறந்தவருக்கு எவ்வளவு கடன் இருக்கிறது, என்னென்ன கடன்கள் உள்ளது? அந்த கடன்களை எந்த சொத்தின் மீது வாங்கியிருக்கிறார்? அக்கடன்களை திருப்பி செலுத்துவதற்கு சொத்துகள் கையிருப்பில் என்னென்ன உள்ளன? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மரணித்தவரின் உயில்
மரணித்தவரின் உயில் உங்களிடமே இருக்கும்பட்சத்தில், அதை வைத்து எளிமையாக சொத்துகளை மாற்றிக்கொள்ளலாம்.. ஒருவேளை உயில் உங்களிடம் இல்லாவிட்டால், நீதிமன்றதை அணுகியே, சட்ட வாரிசு சான்றிதழ் பெற வேண்டும். மேற்கண்ட சான்றிதழ்கள் பெற்றபிறகு சொத்துகளின் விவரங்கள், முதலீட்டு விவரங்கள் பற்றின விவரங்களை பட்டியல் போல தயார் செய்ய வேண்டும்.
இதற்கு பிறகு வங்கி கணக்குகள், மியூச்சுவல் பண்ட், பிஎஃப் முதலீட்டு விவரங்கள், வங்கி லாக்கர் விவரங்கள், கடன் விவரங்கள், இன்சூரன்ஸ் என அனைத்துக்குமான ஆவணங்களை தயாரித்து, அதன்பிறகுதான் உரிமை கோர முடியும்..
உயில் இல்லாமல் சொத்தைப் பிரிப்பது எப்படி?
ஒருவர் உயில் எழுதிவைக்கமல் இறந்துவிட்டால், அவரது சொத்தை பிரிப்பது எளிதான காரியமல்ல.. இறந்தவரின் சொத்து, யாருக்கு சொந்தம் என்பதை கோர்ட்தான் முடிவு செய்யும்.. ஒருவேளை, வாரிசுகளுக்குள்ளேயே ஒற்றுமை தழைத்து, தங்களுக்குள் சொத்துக்களை பிரித்துக்கொண்டால் விவகாரம் எளிதாக முடிந்துவிடும்... ஆனால், அனைத்து வாரிசுகளும் சொத்தை எப்படி பிரிப்பது என்ற நிலை வந்தால், அவர்கள் அனைவரும் சேர்ந்து சட்டபூர்வமாக பதிவு செய்யலாம்.
சொத்து பரிமாற்றம்
ஆனால், சொத்தை பிரிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அனைத்து வாரிசுகளும் தடையில்லா சான்றிதழ் (NOC எனப்படும் No Objection Certificate சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், பிரமாணப் பத்திரத்தையும் (Affidavit) பதிவு செய்ய வேண்டும். இந்த பிரமாணப்பத்திரத்தில்தான், சொத்தின் முழு விவரங்கள், வாரிசுகளின் பெயர்கள், சேர வேண்டிய பங்குகள் என அனைத்துமே இடம்பெற்றிருக்கும்.
சொத்து பரிமாற்றம் முடிந்ததுமே, புதிய உரிமையாளரின் பெயர் வருவாய்த்துறை பதிவுகளில் பதிவு செய்யப்பட வேண்டும். அதேபோல, சொத்தில் ஏற்கனவே வீட்டு கடன் இருந்தால் அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருந்தால் அதற்கேற்ப நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.
இறந்தவரின் வாரிசுகள்
அதேபோல சொத்தின் உரிமையாளர் இறந்து, அவர்களின் பிள்ளைகள் மற்றும் வாரிசுகளுக்கு பாகங்கள் செல்ல வேண்டுமானால், இறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும்..
இந்த இறப்புச் சான்றிதழின்படி, வாரிசு சான்றிதழை விஏஓ அல்லது தாசில்தார் தருவார்.. வாரிசு சான்றிதழை காண்பித்து, இறந்தவரின் அசையும் சொத்துக்களை அடைய முடியும்.. வங்கிக் கணக்குகளுக்கு யார் Nomineeயோ அவர்களுக்கு தருவார்கள்.. அசையா சொத்து என்றால் உயில் இருக்க வேண்டும்.
உயிலே எழுதவில்லையானால், இறப்புச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ் இரண்டையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து Succession Certificate வாங்க வேண்டும். நீதிமன்ற ஆவணத்தில் இருக்கும் அனைவரும் கையெழுத்திட்டால் தான் அசையா சொத்தை விற்க முடியும்.












Click it and Unblock the Notifications