Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார் கார்டு இருக்குல்ல.. ரெடியா? மத்திய அரசின் இன்ப அதிர்ச்சி.. குஷியில் 100 நாள் திட்ட பணியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 100 நாள் வேலை திட்டம் குறித்து, முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை திட்டம்) இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

Do you know the Fantastic Announcement of 100 day work scheme wage Aadhaar Card by Central Government

பணிகள்: இந்த திட்டத்தின்கீழ், குளங்களை தூர்வாருவது,கால்வாய்களை பராமரிப்பது, அரசுக்கு சொந்தமான காடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

அதன்படி தமிழ்நாட்டில் ஒரு நாள் கூலித்தொகை ரூ.281-ஆக இருந்தது.. இந்த ஊதிய உயர்வு சமீபத்தில் சட்டப்பேரவையில் உயர்த்தப்பட்டது.. அதன்படி, 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுவோருக்கு நாளொன்றுக்கு ஊதியம் ரூ.281-ல் இருந்து ரூ.294 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.. மேலும், கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கும் வந்தது..

முறைகேடுகள்: அதேசமயம், இந்த திட்டத்தில் வேலையே செய்யாமல் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தபடியே இருந்தது.. குறிப்பாக, 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கே வராதவர்களின் பெயரை சேர்த்து, பணத்தை முறைகேடு செய்வதாக புகார் கிளம்பியது.. இதையடுத்து, இந்த புகார்களை தடுக்கவும், குறைகளை தெரிவித்திடவும், கட்டணமில்லா தொலைபேசி எண். 18004252152-யும், tnrd.tn.gov.in என்ற இணையதளத்தையும் அறிவித்தது.
இந்நிலையில், இன்னொரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.. அதாவது, இந்த திட்டத்திலுள்ள முறைகேடுகளை தவிர்க்க ஆதார் இணைப்பு அவசியம் என்றும், அதன் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கும் முறையை கடந்த வருடம் மத்திய அரசு அறிவித்தது..

வேலைத்திட்டம்: அதன்படியே, வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.. இந்த கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.. இதற்கு மேல் கால அவகாச நீட்டிப்பு கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டது.

அதேபோல, இந்த திட்டத்தின்படி ஏற்கனவே பதிவு செய்திருருந்த 25.25 கோடி தொழிலாளர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை தற்போது அனுப்பியிருக்கிறது. அதன்படி, தகுதியான காரணங்களால் பதிவு செய்ய இயலாமல் போனவர்களை மறுபடியும் சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, கடந்த 21 மாதத்தில் 7.6 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதால், வேலைக்கான அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்துவிட்டால் அது வங்கி கணக்குடன் இணைந்திருக்கும்.. அத்துடன் நிதி வழங்கும் துறையுடனும் இணைக்கப்பட்டிருக்கும்.

பட்டுவாடா: இதன் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா விரைந்து செய்ய முடியும்.. மேலும், வேலை செய்யாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவதும் தடுக்கப்பட்டுவிடும். அந்தவகையில், ஆதார் அட்டையை பணியாளர் அட்டையுடன் இணைத்திருப்பதன் அடிப்படையிலேயே சம்பளம் பட்டுவாடா இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+