சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டே அண்ட் நைட் அட்டாக் செய்யும் அர்ஜுன் மார்க் 1 ஏ டாங்கர்.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கவுள்ள புதிய வகை அர்ஜுன் கவச வாகனத்தின் முக்கியத்துவங்கள் என்னென்ன என்பது தெரியுமா?

சென்னை ஆவடியில் உள்ள டிஆர்டிஓ போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு பின்னர் மேம்படுத்தப்பட்டது அர்ஜுன கவச வாகனம். இந்த டாங்கியை பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கவுள்ளார்.

Recommended Video

    சென்னை: புதிய அர்ஜூன் மாக் 1A டாங்... ராணுவத்திற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

    இந்த டாங்கி வாகனம் உலகிலேயே மிக துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இதன் பெயர் அர்ஜுன் மார்க் (எம்கே) 1ஏ ஆகும்.

    காஞ்சன் கவசம்

    காஞ்சன் கவசம்

    இந்த அர்ஜுன் கவசத்தில் அப்போதிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் காஞ்சன் கவசமும் டிஆர்டிஓ உருவாக்கிய ரியாக்டிவ் கவசமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அர்ஜுன் எம்கே 1 ஏ டாங்கியானது இரவு, பகல் பாராமல் இலக்கை துல்லியமாக தாக்கும் திறனை கொண்டுள்ளது.

    வினாடிக்கு

    வினாடிக்கு

    சுமார் 10.16 மீட்டர் நீளமும் 68 டன் எடையும் கொண்ட இந்த டாங்கி மணிக்கு 58 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 360 டிகிரி சுழன்று சுழன்று சூறாவளி போல் தாக்கும் திறன் உடையது. இதில் 120 எம்எம் ரைபிள் மூலம் நொடிக்கு 6 முதல் 8 சுற்றுகள் சுட்டுத் தள்ள முடியும்.

    இரவு நேரத்தில் தெளிவாக தெரியும்

    இரவு நேரத்தில் தெளிவாக தெரியும்

    இரவு நேரங்களில் எதிரிகளை துல்லியமாக பார்க்க இரவு நேர கேமிராவும் (night vision) பொருத்தப்பட்டுள்ளது. இதில் கமாண்டர், கன்னர், லோடர், டிரைவர் என 4 பேர் பயணிக்க முடியும். 118 அர்ஜுன் டாங்கர்கள் வாங்க ரூ8500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதை தயாரிக்க 200 தொழிற்சாலைகள் பணியாற்றி வருகின்றன.

    கவசம்

    கவசம்

    இந்த பணியில் 8000 க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்கள். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லும். இந்த கவசத்தில் அதிக திறன் கொண்ட என்ஜின் உள்ளது. இது முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட வடிவமைப்பு ஆகும்.

    English summary
    Here are the features of Arjun Mark 1A which will be handover by PM Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X