கிளைமேட்டே மாறுதே.. திமுக பட்ட பாடெல்லாம் போச்சா.. எடப்பாடி பழனிசாமிக்கு வந்த தெம்பு.. பெரிய மூவ்
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் நெருங்கி வரும்சூழலில், அதிமுக என்ன செய்ய போகிறது? முக்கியமாக, கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு என்ன செய்ய போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொடநாடு வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது... கொடநாடு விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்..

இதற்கு நடுவில், கொடநாடு சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த கனகராஜின் சகோதரர், கொடநாடு கொலை தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று கூறி அதிர்ச்சியை கிளப்பிவிட்டிருந்தார்.
கொடநாடு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான விஷயமாக இந்த கொடநாடு விவகாரத்தை திமுக கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.. இதனால், எடப்பாடிக்கான சிக்கல்களும் கூடிவருவதாக சொல்கிறார்கள்.
"கொடநாடு" என்று சொன்னாலே "கொல நடுக்கம்" வருதே பழனிசாமிக்கு? அதிகமாகப் பதறுகிறார் பழனிசாமி? எதற்காக அவர் பதற வேண்டும்? "எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லத் தயார்" என்று என்றாவது சிபிசிஐடி வாசலுக்கு அவர் வந்திருந்தால் அவரை நம்பலாம். ஆனால், அவரது பதற்றமே அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது" என்று முரசொலி நாளிதழ் காட்டமான கேள்வியை எழுப்பியிருந்தது.
இதற்கு எடப்பாடியே ஒரு பதிலையும் தந்திருந்தார்.. "ஒரு முதல்வர் ஆட்சியில் இருக்கும்போது பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். திமுக ஆட்சியில் இருந்தபோது பலரும் இறந்தார்கள். அதையெல்லாம் நாங்கள் திரும்பி தோண்டமாட்டோமா? அதிமுக ஆட்சி நடந்தபோது நடைபெற்ற பல சம்பவங்களில் இதுவும் ஒன்று.
சந்தேகம்: நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெறும் நிலையில், இதனை மையமாக வைத்து ஏன் பேசுகிறார்கள்? நீங்கள்தான் சந்தேகம் இருக்கிறது என்கிறீர்களே, அப்படின்னா, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுங்கள்" என்று கூறி திமுகவையே அதிரவைத்தார் எடப்பாடி.
இப்படி கொடநாடு விவகாரம் நாலாபக்கமும் அழுத்தத்தை தந்துவர, இதுகுறித்து டெல்லி மேலிடத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. நேற்று டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளார் எடப்பாடி. அப்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி, சீட் விவகாரம் தொடர்பாக பேசியதாக தெரிகிறது.
அமித்ஷா சந்திப்பு: அப்போது, கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. கொடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தன்னை களங்கப்படுத்த சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி எண்ணுகிறாராம்.. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்ததால், இது தொடர்பாகவும் அமித்ஷாவிடம் பேசியிருப்பதாக சொல்கிறார்கள்.

காரணம், எம்பி தேர்தல் நேரத்தில் கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் தன் மீதான விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுப்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லையாம்.
திமுகவுக்கு பிரஷர்: தன் மீது களங்கம் கற்பிப்பவர்கள் மீது வழக்கு தொடருவேன் என்று ஏற்கனவே எடப்பாடி சொல்லியிருந்தாலும், அமித்ஷாவுடனான சந்திப்பின்போது கொடநாடு விவகாரம் பற்றியும் பேசி இருப்பதாக கூறுகிறார்கள். இதையடுத்து, கொடநாடு விவகாரத்தில், பாஜக மேலிடம் மூலம் திமுகவுக்கு அழுத்தம் தரப்படுமா? என்ற சந்தேகமும் வட்டமடிக்க துவங்கி உள்ளன. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications