செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
சென்னை: நிபந்தனை இல்லாத செட்டில்மென்ட் பத்திரத்தின் அடிப்படையில் சொத்துக்களை வாங்கலாமா? வருவாய் துறை அதிகாரிகள் சொல்வது என்ன?
தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது விருப்பப்படி, பிரித்து எழுதி வைக்கப்படுவதுதான் செட்டில்மென்டு பத்திரம் ஆகும்.
உயில் வேறு: சிலர் உயில் என்பதையே செட்டில்மென்ட் பத்திரம் என்று நினைத்து கொள்கிறார்கள்.. ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துகளை, தனக்கு பிறகு இன்னொருவருக்கு எழுதி வைப்பதுதான் உயில்.. இது முழுக்க முழுக்க சுயநினைவுடன் எழுதுவதாகும்..

ஆனால் செட்டில்மென்ட் பத்திரம் என்பது அப்படியில்லை.. தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது விருப்பப்படி, பிரித்து எழுதி வைக்கப்படுவதுதான் செட்டில்மென்டு பத்திரம் ஆகும். இது தானமாகவோ, பரிசாகவோ கொடுப்பதாகும்..
செட்டில்மென்ட்: ஒரு நபர், தன்னுடைய பெயரில் உள்ள சொத்தை குடும்ப உறுப்பினர்கள் யார் பெயருக்கு வேண்டுமானாலும் தான பத்திரம் அல்லது செட்டில் மென்ட் பத்திரம் வழங்கலாம். குறிப்பாக, தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை ஆகியோரை மட்டும்தான் குடும்ப உறுப்பினர்களாக பத்திர அலுவலகம் ஏற்றுக் கொள்கிறது.
அந்த வகையில் உயில் + செட்டில்மென்ட் பத்திரம் இரண்டிற்கும் வித்தியாசம் நிறைய உள்ளது.
அதுமட்டுமல்ல, ஒருவர் தானமாக கொடுக்கும் செட்டில்மெண்ட் பத்திரத்தை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது.. அதுபோல ரத்து செய்யும் பத்திரமும் விற்ற சொத்தையும் திரும்ப வாங்கவும் முடியாது. ரத்து செய்யும் செட்டில்மெண்ட் பத்திரங்கள் கோர்ட்டுக்கு போகும்பொழுது, நீதிமன்றமும் அதை செல்லாது என்று அறிவித்துவிடுகிறது.
சாத்தியமா: எனவே, ஒருவர் தன்னுடைய சொத்துக்களை இன்னொருவருக்கு செட்டில்மென்ட் செய்துவிட்டால், கொடுத்த சொத்தை மறுபடியும் திரும்ப பெற முடியாது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியப்படுவதில்லை.. சூழல்கள் காரணமாக, சில பெற்றோர்கள், செட்டில் மென்ட் பத்திரம் வாயிலாக, வாரிசுகளுக்கு சொத்தை தந்து விடுகிறார்கள்.
வாரிசுகளும் அந்த சொத்தை வாங்கிக்கொண்டு, பெற்றோரை கவனிக்காமலும், கண்டுகொள்ளாமலும் நடுத்தெருவில் விட்டுவிடுகிறார்கள்.. இதனால் சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், நிர்க்கதியற்ற எத்தனையோ பெற்றோர்கள், மாவட்ட கலெக்டர்களிடம் கண்ணீருடன் மனு கொடுக்கும் நிலைமைக்கு வந்துவிடுகிறார்கள்.
ஆதங்கம்: தான் சம்பாதித்த சொத்தை, அந்த செட்டில்மென்ட் பத்திரத்தை, ரத்து செய்ய வழியிருக்கிறதா? என்றும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள். எனவேதான், "சட்ட விதிகளுக்கு உட்பட்டு" வருவாய் துறை இதில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது..
இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் சொல்லும்போது, "குறிப்பிட்ட சில வழக்குகளில் மட்டும், செட்டில்மென்ட் பத்திரங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதனால், புதிதாக சொத்து வாங்கும்போது, அதை விற்பவர் செட்டில்மென் பத்திரம் வாயிலாக பெற்றவராக இருந்தால், அதில் ஆட்சேபனை ஏதாவது பதிவாகி உள்ளதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். அதேபோல, சொத்தின் மீது வருவாய் துறையில் ஏதாவது நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
அறிவுறுத்தல்: காரணம், பெற்றோருக்கும், வாரிசுகளுக்கும் இடையிலான பிரச்சனையால், அந்த சொத்தை வாங்க வரும் நபர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படகூடாது. எனவேதான், சொத்து வாங்கும்போது, அதன் செட்டில்மென்ட் பத்திரம் தொடர்பான பிரச்சனைகள் என்னென்ன என்பதை கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் வருவாய்துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications