திமுகவில் "சுமதி" யாரு தெரியுமா? தென்சென்னையை அசத்திய தமிழச்சி தங்கபாண்டியன்! மீண்டும் டெல்லி போறாரு
சென்னை: தென்சென்னையில் மீண்டும் திமுக எம்பியாக தேர்வாகியிருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.. யார் இவர்? இவர் பின்னணி என்ன?
தமிழச்சி தங்கபாண்டியன் - தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான தங்கப்பாண்டியனின் மகள் ஆவார்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான தங்கம் தென்னரசின் அக்காவும்கூட.

கவிதை, பேச்சாற்றல் என பன்முகை திறமையை கொண்டிருப்பவர்.. தமிழ்மொழி இவர் பேச்சில் விளையாடும்.. ஆனால், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர்.
ஆங்கில புலமை: ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.. சென்னை ராணி மேரிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் தமிழச்சி தங்கபாண்டியன்.
இவரது இயற்பெயர் சுமதி ஆகும்.. முதல்வர் ஸ்டாலின் ஒருமுறை, தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு திருமணத்தில் பேசும்போது, இந்த பெயர் விளக்கம் குறித்து பேசியிருந்தார்..
கலைஞர்: அதாவது, கடந்த 2007-ம் ஆண்டு திமுக இளைஞர் அணியின் முதல் மாநில மாநாடு நெல்லையில் நடந்தபோது, அந்த மாநாட்டின் கொடியேற்று விழா நிகழ்ச்சியை தங்கபாண்டியனின் மகள் சுமதியை அவர்களை அழைத்து நடத்துங்கள் என்று கலைஞர், ஸ்டாலினுக்கு உத்தரவிட்டாராம்.
ஆனால், ஒரு கல்லூரியில் அவர பேராசிரியராக பணியாற்றி கொண்டிருந்ததால், அந்தப் பணிக்கு ஏதேனும் இடையூறு வந்துவிடுமா? என்று நினைத்து, தமிழச்சி தங்கபாண்டியன் என்று பெயரை விளம்பரப்படுத்த சொன்னாராம். சுமதியும் இதை மகிழ்ச்சியுடன் ஏற்று, தமிழச்சி தங்கபாண்டியனாக மாறினாராம்.
பெயர் குழப்பம்: கடந்த முறை, தென்சென்னை தொகுதி வேட்புமனுவில் சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் என்று குறிப்பிட்டதால், குழப்பம் ஏற்பட்டு, இந்த விவகாரம் கோர்ட் வரை சென்ற சம்பவம் உண்டு.. கடந்த முறை போலவே, இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியனின் வெற்றி கணிக்கப்பட்டதுதான்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கினார். ஆனாலும், 5,16,628 வாக்குகளை அபாரமாக பெற்று வெற்றி பெற்றார் தமிழச்சி தங்கபாண்டியன்.. அதாவது, 225,945 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழிசையை தோற்கடித்தார்.. அதிமுக வேட்பாளர் 1.72491 வாக்குகளை பெற்று 3வது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் 83927 வாக்குகள் பெற்று 4வது இடத்தையும் பெற்றனர்.
சபாஷ்: கடந்த 2019 தேர்லிலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜெயவர்தனேவை 2,26,223 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அசத்தியிருந்தார்.. இப்போது இப்போது தென் சென்னையிலிருந்து மீண்டும் மக்களவைக்கு செல்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.












Click it and Unblock the Notifications