"சில்லுவண்டு".. முதல்வர் தூக்கமிழக்க காரணமே நீங்கதானா.. கேள்வி கேட்டதுமே பதறிய ஆ.ராசா.. நச் விளக்கம்
சில்லுவண்டு கூடவெல்லாம் இன்னைக்கு அரசியல் செய்ய வேண்டியுள்ளது என்றார் ஆ ராசா
சென்னை: சில்லுவண்டு கூடவெல்லாம் இன்னைக்கு அரசியல் செய்ய வேண்டிய நிலைமை எங்களுக்கு இருக்கு.. நான் இதை வருத்தத்துடன் சொல்றேன்" என்று திமுக எம்பி ராசா கூறியுள்ளார்.
திமுகவின் எம்பியும், மூத்த தலைவருமான ஆ.ராசா, மிகப்பெரிய ஆளுமையாக, தவிர்க்க முடியாத தலைவராக அரசியல் களத்தில் உருவாகி உள்ளார்..
சமீபகாலமாகவே இந்துத்துவா, மனுதர்மம், சனாதனத்துக்கு எதிரான கருத்துக்களை ஆழ விதைத்து வருகிறார் ஆ.ராசா.. அந்தவகையில், நம் ஒன் இந்தியா தமிழ் சேனலுக்கு சிறப்பு ஒன்றை தந்துள்ளார்.

தூக்கமே போச்சு
அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, "திமுகவினர் பேசும் பேச்சால், தூக்கம் வரவில்லை, தூக்கம் கெடும் அளவுக்கு அவதிப்படுகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பொதுக்குழுவில் சொல்லியிருந்தார்.. ஆ.ராசா பேசுகிற பேச்சுக்குதான் இப்படி முதல்வர் வருத்தப்படுகிறார் என்றுகூட சில பத்திரிகைகள் எழுதியிருந்தன.. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்று ஆ.ராசாவிடம் கேள்வி எழுப்பினோம்.. அதற்கு ஆ.ராசா சொன்ன கருத்துதான் இது:

பர்சனல்
இதை ஏன் பர்சனலாக எடுக்க வேண்டும்.. ராசா என்றால், உடனே ராசா என்பார்கள், பொன்முடிதான் காரணம் என்றால், அவர் பக்கம் திருப்பிவிடுவார்கள்.. நேரு என்றால், உடனே நேரு மீது பழிசொல்வார்கள்.. எனவே தனிப்பட்ட முறையில், இதை எடுத்துக் கொள்ளக்கூடாது.. இதை தலைமை தத்துவத்தின் ஒரு அடையாளமாக பார்க்க வேண்டும்.. அப்படி என்ன சொன்னார், "மிகப்பெரிய இயக்கத்தில் இருக்கிறோம்.. இவ்வளவு தொண்டர்கள் இருக்கிறார்கள்.. நம்மை நம்பி ஆட்சியை ஒப்படைத்துள்ளனர்.. நீங்கள் பேசும் ஏதாவது ஒரு சிறுவார்த்தைகூட, அதுயாரையாவது காயப்படுத்தியிருந்தால், அதை பூதாகரப்படுத்துவதற்கு வெட்டியும் ஒட்டியும் பேசுவதற்கு ஆள் இருக்கு"ன்னு முதல்வர் சொல்ல வர்றாரு..

கோழிக்குஞ்சு
ஏன் என்றால் டெக்னாலஜி வளர்ந்து விட்டது.. எனக்கே அது நடந்துவிட்டது.. அன்னைக்கு தேர்தல் சமயத்தின்போது, நான் சொன்னதையே, வேறு மாதிரியாக, "பிறப்பில்" வந்து முடிச்சிபோட்டு பேசினார்கள்.. இதைதான் சுட்டிக்காட்டுகிறார்.. சற்று கவனமாக பேசுங்கள், உங்களுக்காக நான் கவலைப்படுகிறேன் என்கிறார் தலைவர்.. கூட்டில் இருக்கின்ற குஞ்சையும், கூட்டையும் பத்திரமாக காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தாய்ப்பறவைக்கு இருக்கிறது.. அதனால் இது தாய்ப்பறவையின் தலைமை பண்பை தான் பார்க்க வேண்டுமே தவிர, இவர் சொன்னாரா, அவர் சொன்னாரா? என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

கருணாநிதி
என்னை பொறுத்தவரையில், ஒரு வார்த்தையை சொன்னால், அதற்கு கடைசிவரை நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.. அப்படி என்னால், நடந்து கொள்ள முடியாத வார்த்தைகளை பேசக்கூடாது என்றும் நினைப்பேன்.. சித்தாந்த எதிரிகள் நியாயமாக இல்லையே என்ற வருத்தம் எனக்குண்டு.. ராஜாஜியை அன்று நியாயமான எதிரியாக பார்த்தார் பெரியார்.. அண்ணாவை சித்தாந்த ரீதியாக இல்லாவிட்டாலும், காமராஜரை எதிர்த்து அரசியல் செய்தார்.. அங்கே ஒரு நாணயம் இருந்தது, பெருந்தலைவர் காமராஜரும் அதை மதித்தார்.. தன்னுடைய தொகுதிக்கும் முதல்வரையே அழைத்து சென்றார்..

சில்லுவண்டு
கலைஞரும், சோ-வும்கூட இருவருமே ஒருவரையொருவர் நாணயமாக பார்த்தார்கள்.. இருவருமே விமர்சித்து கொள்வார்கள்.. அதில் ஒரு நாணயம் இருந்தது, அறிவு இருந்தது, முதிர்ச்சி இருந்தது.. 2 பேரும் கேலியும் கிண்டலுமாக பேசிக் கொள்வார்கள்.. அப்படிப்பட்ட ஒரு முதிர்ச்சி, கலைஞருக்கு அமைந்தது போல், அண்ணாவுக்கு அமைந்தது போல், பெரியாருக்கு அமைந்ததுபோல், இப்போது இருக்கிற எங்கள் தலைவருக்கு இல்லை.. எங்கள் கிராமத்தில் சில்லுவண்டு என்பார்கள்.. அந்த மாதிரி, சில்லுவண்டு கூடவெல்லாம் இன்னைக்கு அரசியல் செய்ய வேண்டிய நிலைமை இருக்கு.. நான் இதை வருத்தத்துடன் சொல்றேன்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications