எடப்பாடியை விடுங்க.. இலவு காத்த கிளி.. ஜிகே வாசன் ஏன் திடீர்னு ஏன் அதை சொன்னார்? குழம்பும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்சமயம் யாருடனும் கூட்டணியில் இல்லை தமாகா தலைவர் ஜிகே வாசன் அறிவித்ததில் இருந்தே, அரசியல் களம் அனலடித்து கொண்டிருக்கிறது. வாசன் ஏன் அப்படி சொல்ல வேண்டும்?? இதுகுறித்து பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார் தமாகா தலைவர் ஜிகே வாசன்.. அப்போது, "மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, நிர்வாகிகளை சந்தித்துப் பேசி, கட்சியை பலப்படுத்தி வருகிறேன்... தை மாதம் பிறந்த பிறகு,கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளைக் கேட்க உள்ளேன். அதனடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

கூட்டணி இல்லை: இப்போதைக்கு நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக ஜனவரி மாத இறுதியில் அறிவிப்போம். அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கட்சிகளிடம் நாங்கள் நட்பு கட்சியாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

Do you know why did G K Vasan say about BJP Alliance and Will TMC Join with Edappadi Palanisamys AIADMK

அதேசமயம், நாங்கள் எந்த கட்சியுடனும் இப்போதைக்கு கூட்டணியில் இல்லை.. யார் யார் எந்தக் கூட்டணிக்கு செல்வார்கள் என்றும் தெரியவில்லை.. தமாகா, தேமுதிக, பாமக கட்சிகளே இதுவரை கூட்டணியை அறிவிக்கவில்லையே.. அதனால், என்னால் யூகமாக இப்போது எதையும் சொல்ல முடியாது. ஆனால், எதிரியை வீழ்த்த சரியான வியூகம் தேவை" என்றார்.

ஜிகே வாசன் அதிரடி: வாசனின் இந்த பேட்டி பெருத்த அதிர்வலையை உண்டுபண்ணியது.. காரணம், மேலிட பாஜக தலைவர்களின் நேரடி நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றவர் வாசன்.. அதனால்தான், 3 முறை எம்பி சீட்டுக்களை வாசனுக்கு வலிய தர முன்வந்தது பாஜக. இந்த முறையும் இதே கோரிக்கையை பாஜக தலைவர்கள் முன்வைக்கவும், அதனை ஏற்கும்முடிவில் வாசன் இருப்பதாக தெரிகிறது.

ஆனால், சமீபத்தில் நடந்த அதிமுக - பாஜக கூட்டணி முறிவை, வாசன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. அதிமுக, பாஜக என இரு தரப்பு தலைமையையும் சமாதானம் செய்யும் முயற்சியையும் மேற்கொண்டதாக தெரிகிறது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம், வாசனையே அதிர செய்துள்ளது.

விவாதம்: இப்படிப்பட்ட சூழலில்தான். புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியையும், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி பாஜகவையும் ஆதரிப்பதாக அறிவித்திருக்கின்றன.. ஆனால், ஜி.கே வாசனால் கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் உடனடியாக எடுக்க முடியவில்லை.. அதிமுக-பாஜக கூட்டணி உறவு மீண்டும் துளிரும் என வாசன் எதிர்பார்த்திருந்திருக்கிறார் வாசன். அதனால்தான், தமாகா மாநில நிர்வாகிகளிடம் கடந்த வாரம் இதுகுறித்து பேசியிருக்கிறார்.

அப்போது, "அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் வருமா? அந்த கூட்டணியில் தான் தமாகா இருக்கிறதா? அதிமுக-பாஜக கூட்டணி இல்லைன்னா நம் நிலைப்பாடு என்ன? என்றெல்லாம் அலசப்பட்டுள்ளது.

அப்போது வாசன், "அதிமுக-பாஜக கூட்டணி வருமா? வராதா? உறுதியாக தெரிந்து கொள்ளுங்கள். இலவு காத்த கிளிபோல இருந்து விடக்கூடாது என மாநில நிர்வாகிகள் வாசனிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியிடம் மீண்டும் ஒருமுறை பேசியிருக்கிறார் ஜி.கே.வாசன்.

நோ சான்ஸ்: அப்போது, "பாஜகவுடனான கூட்டணிக்கு இனி வாய்ப்பே இல்லை. இது பாஜக தலைமைக்கே உறுதியாக தெரியும். நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்று ஜி.கே வாசனிடம் சொன்னாராம் எடப்பாடி பழனிச்சாமி.

இதனையும் தன்னுடைய மாநில நிர்வாகிகளிடம் ஜிகே வாசன் விவாதிக்க, "அப்படியானால் எந்த கூட்டணியிலும் த.மா.கா. இல்லைன்னு அறிவித்து விடுங்கள். தேர்தல் நேரத்தில் நம் முடிவை தெரிவிக்கலாம்" என்று வற்புறுத்தியிருக்கிறார்கள் மாநில நிர்வாகிகள். இதனையடுத்தே எந்த கூட்டணியிலும் நாங்கள் இல்லை என்று அறிவித்தாராம் மூப்பனார் மகன் ஜிகே வாசன்.

இப்போதைக்கு கூட்டணியில் இல்லை என்று வாசன் சொல்லியிருந்தாலும், அதிமுக, பாஜக தனித்தனியாக போட்டியிடும்பட்சத்தில் யாருடன் இணைய போகிறார் என்ற ஆர்வம் தமிழக அரசியல் களத்தில் எகிறி கொண்டேதான் இருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+