Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அண்ணன் பழனிசாமி" கிட்ட ஒன்னு சொல்லணும்.. அதிமுகவுக்கு மீண்டும் "அபாயமணி".. கடுகடுக்கும் பாஜக.. யாரது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அரசியல் ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும்நிலையில், அடுத்த எச்சரிக்கையும் எடப்பாடியின் கூடாரத்திற்கு சென்றுள்ளது.. இதற்கு என்ன காரணம்?

விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ளது.. 6 மாதத்துக்கு முன்பேயே பாஜக இதற்கான முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.. அந்தவகையில் தமிழகத்தை குறி வைத்து, கூடுதலாக காய் நகர்த்தி வருகிறது பாஜக.

எப்படியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக முயற்சிக்கக்கூடும் என்பதால், மிகப்பெரிய கூட்டணி திமுகவுக்கு எதிராக உருவாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே, திமுகவுடன் மட்டுமே தாங்கள் கூட்டணி என்பதை திருமாவளவன் உறுதிப்படுத்தியபடியே வருகிறார்.

 மகா கொம்பன்

மகா கொம்பன்

"திமுக - விசிக கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைத்துவிட முடியாது.. சிதைத்துவிட முடியாது.. ஏனென்றால், நாங்கள் கொள்கை சார்ந்து ஒன்றிணைந்த கூட்டணியாக இருக்கிறோம்.. தனிப்பட்ட பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அது பேசும் அரசியலை எதிர்க்கிறோம்.. அதன் கொள்கையை எதிர்க்கிறோம்.. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகத்துக்கே எதிரி என்று எங்களை திசைதிருப்புகிறார்கள்.. பாமகவின் அணுகுமுறைகளை நாங்கள் விமர்சிக்கிறோம்.. அதற்காக நாங்கள் ஒட்டுமொத்த வன்னியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை" என்று தெளிவுபடுத்தியிருந்தார் திருமாவளவன்.

 கருணாநிதி

கருணாநிதி

இப்படி திமுகவுடனான கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போதெல்லாம், அதிமுக குறித்தும் பேசிவருகிறார்.. கடந்த ஒரு வருட காலமாகவே, அதிமுகவின் நிலைமையை பற்றியும் கவலையை வெளிப்படுத்தி வருகிறார். அறிவுரைகளையும் சொல்லி வருகிறார்.. பாஜகவிடம் கவனமாக இருக்கும்படியும் அதிமுகவையும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்.. நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 'எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ.பன்னீர்செல்வமா என்றால், பாஜக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்திருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டாலும் இதில் பாஜக மற்றும் சங்பரிவார்களின் ஆதரவும் பின்னணியில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

 மாபெரும் துரோகம்

மாபெரும் துரோகம்

அவருக்கு நான் தோழமையோடு விடுக்கின்ற வேண்டுகோள், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூக நீதிக்காக தமிழகத்தில் குரல் கொடுத்திருக்கிறார்கள். சமூக நீதியை பாதுகாத்திருக்கிறார்கள். அந்த சமூக நீதிக் கொள்கைக்கு நேர் எதிரியாக இருக்கக்கூடிய பாஜகவை தூக்கி சுமப்பது, எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கருத்தியல் அடிப்படையில் செய்கிற மாபெரும் துரோகம் ஆகும். எனவே எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களை நெஞ்சிலே நிறுத்தி சமூக நீதிக்கான ஓர் இயக்கமாகவே அதிமுகவை தொடர்ந்து நடத்துவதற்கு துணிந்து முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சமூக நீதி களத்தில் நானும் நிற்பதால், இந்த வேண்டுகோளை நான் அவருக்கு வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 யாவும் பாழே

யாவும் பாழே

திருமாவளவன் இவ்வாறு பேச காரணம் என்ன? ஒருவேளை திமுகவிடம் கூட்டணியை உறுதிப்படுத்துகிறாரா? அல்லது அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறாரா? என்றெல்லாம் சந்தேகங்களை சிலர் கிளப்பி வருகிறார்கள்.. சில நாட்களுக்கு முன்புகூட, அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியானதுமே முதல் நபராக எடப்பாடிக்கு வாழ்த்து சொன்னது திருமாவளவன்தான்.. அந்த வாழ்த்தில் "இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக'வை சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே" என்று பதிவிட்டிருந்தார் திருமாவளவன்.. இதற்கு பிறகு, மீண்டும் 2 நாட்கள் கழித்து, இன்னொரு பேட்டியை திருமாவளவன் தந்திருந்தார்..

செம்மலை

செம்மலை

அதில், "திமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை. அது பாஜகவுக்கு தான் பயனளிக்கும். அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு மட்டும் பாதிப்பில்லை, தமிழ்நாட்டிற்கே பாதிப்பு. பாஜகவை கழற்றிவிட வேண்டும். பாஜக இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கும் நல்லது. தமிழ்நாட்டிற்கும் நல்லது" என்றார். திருமாவளவன் இப்படி சொன்னதுமே, அதிமுக மூத்த தலைவர் செம்மலையிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு செம்மலை, "எதிர்காலத்தில் எது நல்லது என்பதை தீர்க்கமாக முடிவெடுக்கக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி" என்று சூசகமாக பதிலளித்தார்..

 அட்வைஸ்

அட்வைஸ்

அதாவது, ஒரே நேரத்தில், திருமாவளவன் பேசியதையும், அதற்கு செம்மலை தந்த பதிலையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்துவிட முடியாது என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.. காரணம், விசிகவை பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியை தீர்மானிக்ககூடிய அளவில் களமாடி வருகிறது. அக்கட்சிக்கென வலுவான வாக்கு வங்கியும் உள்ளன.. தமிழக அரசியலில் அசைக்க முடியாத இடத்தை இறுக்கமாக தக்க வைத்தும் வரும்நிலையில், வெற்றியை தீர்மானிக்கம் மிகப்பெரிய சக்தியாக அரசியல் களத்தில் திகழ்ந்து வருகிறது. எனினும், திமுக கூட்டணியில் இருந்துக்கொண்ட, அதிமுகவுக்கு திருமாவளவன் ஏன் அட்வைஸ் செய்கிறார்? என்ற சந்தேகமும் வட்டமடித்தது.

 மேகக்கூட்டங்கள்

மேகக்கூட்டங்கள்

இதுகுறித்து அன்றைய தினம் அரசியல் விமர்சகர்கள் சொல்லும்போது, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால், திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் போன்றவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமா இப்படி பேசுவதால், அது அரசியலில் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படும்.. அப்படி புரிந்து கொண்டாலும் பரவாயில்லை என்பதால்தான், திருமாவளவன் தன்னுடைய கருத்தை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதனால், திமுகவில் இருந்து விலகக்கூடிய சிந்தனை விசிகவுக்கு இருக்கிறது என்றே தெரிகிறது. அதேபோல, பாஜக தங்கள் கூட்டணியில் இல்லாமல் போனால், மேலும் பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் வந்து சேரும் என்கிற எண்ணம் எடப்பாடிக்கும் உண்டு.. அந்தவகையில் தற்போது கூட்டணி மேகங்கள் மாறுகின்றன.. காட்சிகளும் மாறுகின்றன என்று கூறியிருந்தனர்.

எடப்பாடிண்ணே

எடப்பாடிண்ணே

ஆனால், திருமாவளவனை பொறுத்தவரை, கூட்டணி அரசியல் என்ற விஷயத்தையும்தாண்டி, சமூகநீதிக்கான அவர் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், அதிமுகவுக்கான எச்சரிக்கை அவசியம் என்றே நினைக்கிறார்.. 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பிரபல சேனலுக்கு திருமாவளவன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது அவர் சொன்ன வார்த்தைகளை இங்கே நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.. திருமாவளவன் பேசும்போது, "தமிழ்நாட்டில் கலைஞருக்கு எதிராக அன்று எம்ஜிஆர் இருந்தார்.. அடுத்து ஜெயலலிதா அம்மா இருந்தாங்க.. இப்படி இரு துருவ அரசியல் இங்கே நடந்தது.. இப்படி சொல்வதைவிட, திமுகவுக்கு எதிராக அதிமுக இருந்தது என்று சொல்வதே சரி.. திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளால், காங்கிரசும் பாஜகவும் இங்கே வளர முடியாமல் போனது.. ஒருவேளை அதிமுக என்ற கட்சி உருவாகாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் Vs திமுக என்றே இங்கே நீண்ட கால அரசியல் நடந்திருக்கும்.

 அண்ணன் எடப்பாடி

அண்ணன் எடப்பாடி

தேசிய கட்சியாக காங்கிரஸ் இருப்பதால்தான், இன்னொரு தேசிய கட்சியான பாஜக வளர முடிந்தது.. 2 மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் இடத்தில், 2 தேசிய கட்சிகள் வர முடியாது... அண்ணன் எடப்பாடி பழனிசாமியை நான் நேரில் சந்தித்தால், அதிமுகவை வலிமைப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வியை கண்டிப்பாக நான் அவரிடம் கேட்பேன்.. ஜெயலலிதா எம்ஜிஆர்மாதிரி அக்கட்சியை ஒருவர் வழிநடத்தவேண்டும்.. நானே ஒரு அரசியல் கட்சி நடத்துவதால், இன்னொரு கட்சி நலன் பற்றி பேசக்கூடாது.. அதிமுக சிதறினால், அதனால் தங்களுக்கு நன்மை என்றே யாராக இருந்தாலும் நினைப்பார்கள்... அதிமுக பலவீனமாக வேண்டும், அதிமுக தொண்டர்கள் சிதறிபோய், தங்கள் கட்சியில் வந்து சேர வேண்டும், அதிமுக அழிந்து போக வேண்டும் என்றெல்லாம் பிற கட்சியினர் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை..

 சிதறல்கள்

சிதறல்கள்

காரணம், அதிமுக இடத்தில் பாஜக வந்து உட்கார்ந்து கைப்பற்ற நினைக்கிறது. அங்கே பாஜக வரக்கூடாது என்றால், அதிமுக வலுவாக இருக்க வேண்டும்.. அதிமுக இப்போது 3 அணியாக சிதறி கிடப்பதற்கு பாஜகதான் காரணம்.. பாஜக மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக இருந்திருக்கும்.. பாஜக தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைத்தனர்.. இப்போது அவங்களையும் உடைத்து விட்டார்கள்... ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.. தவறவிட்டால், மறுபடியும் 2024-ல் ஆபத்து ஏற்படும்" என்கின்ற வார்த்தையை அழுத்தமாக பதிவு செய்திருந்தார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+