நீதிபதி எழுப்பிய ஒற்றை கேள்வி.. கிண்டி மருத்துவரை தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் ஏன் தெரியுமா?
சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் தனது தாய்க்கு சரியாக சிசிக்சை அளிக்கவில்லை என மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ் மீது போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், போலீசாரை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியது. அந்த கேள்விக்கு பின்னர் இளைஞர் விக்னேஷுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தியால் குத்திய விக்னேஷை மருத்துவமனையில் இருந்த காவலாளிகள், பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் போலீசாரிடம் கூறும் போது, எனது தாய்க்கு, முறையாக சிகிச்சை அளிக்காதது குறித்து மருத்துவரிடம் கேட்டேன். ஜனவரி மாதம் முதல் எனது தாயின் சிகிச்சைக்காக மருத்துவர் பாலாஜியிடம் சென்றேன். என் தாயக்கு கீமோ சிகிச்சை அளித்து வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது தாயின் உடல் நிலை தேறியது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஒவ்வொறு முறையும் 20 ஆயிரம் வரை செலவானது. மருத்துவ செலவுக்கான பணத்தை தருமாறு மருத்துவர் பாலாஜியிடம் கேட்டேன். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. மருத்துவர் என்னை திட்டி கீழே தள்ளினார். ஆத்திரத்தில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குத்தினேன் என்று கூறியிருந்தார். இதனிடையே மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது பி.என்.எஸ் 127(2), 132, 307, 506(2) உட்பட 5 பிரிவுகளின் கீழ் விக்னேஷ் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கிண்டி அரசு மருத்துவமனை உதவி பேராசிரியர் டாக்டர்.சேதுராஜனிடம் புகாரை பெற்று, விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு கடந்த நவம்பர் 22ம் தேதி நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆயுதம் எடுத்து வந்து மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார். இது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது," என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே மருத்துவரை தாக்கிய விக்னேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விக்னேஷ் தரப்பில் சந்தோஷ் வெங்கேடேஷ் ஆகியோர் ஆஜராகினார்கள். அப்போது காவல்துறை தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது விக்னேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காத காரணத்தினால், ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது.. நோயாளிக்கு சரியான சிகிச்சை அளித்திருந்தால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது என்று வாதிட்டார். அப்போது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அரசு தரப்பிடம் ஒரு கேள்வி எழுப்பினார்.
அரசு மருத்துவமனையை நாடி வரு நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் கூறப்படவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, இளைஞர் விக்னேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வேலூர் சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காலையில் அங்குள்ள காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும் வரை கையெழுத்திட வேண்டும்.. என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications