தலைகீழாக மாறிப்போன சென்னை! கிரவுண்ட் ஃப்ளோருக்கு வாடகைக்கு ஆள் கிடைக்கல!
சென்னை: பொதுவாக எல்லா ஊரிலும் கிரவுண்ட் ப்ளோரில் அதாவது தரை தளத்தில் வீட்டு வாடகை அதிகம், ஏனெனில் அது தான வசதியாக இருக்கும். ஆனால் சென்னையில் வெள்ளத்திற்கு பின்னர் கிரவுண்ட் ப்ளோர் வாடகை அதிரடியாக குறைந்துள்ளது. பேமிலியாக உள்ளவர்கள் குடியிருக்கவே தயங்குவதால் தரைதளத்தில் குடியிருக்க வாடகைக்கு ஆள் கிடைக்காத நிலை வேகமாக உருவாகி வருகிறது.
இந்தியாவில் எந்த ஊரில் என்றாலும், தமிழகம் முழுவதுமே ஒரு குடியிருப்பை பொறுத்தரை தரை தளத்தில் உள்ள வீடுகளைத்தான் மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனெனில் ஏறி இறங்க பலருக்கும் சிரமம் என்பதால் மாடியில் உள்ள வீடுகளை விரும்பமாட்டார்கள். பொருட்களை ஏற்றி இறக்குவதும் சிரமம். தண்ணீர் எடுக்கவும் சிரமம்.

இதனால் தரைதளத்தில் உள்ள வீடுகளை மக்கள் தேடி தேடி வாடகை மற்றும் லீசுக்கு குடியிருப்பார்கள். இதில் தரை தளம் கிடைக்காத நிலை இருந்தால் மட்டுமே முதல் மாடி, இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என்று மேலே மேலே செல்வார்கள். அதேநேரம் வயதானவர்கள் என்றால் கண்டிப்பாக தரைத்தளம் உள்ள வீடுகளைத்தான் விரும்புவார்கள்.
ஆனால் சென்னையில் அடிக்கடி வெள்ளம் வந்து தரைதளத்தில் உள்ள வீடுகளை பாதிப்பதால் மக்கள் தரைதளத்தில் குடியிருக்கவே தயங்குகிறார்கள். பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், காரப்பாக்கம்,கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், வேளச்சேரி உள்பட சென்னையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ள பகுதிகளோ அங்கு எல்லாம் 2015 வெள்ளத்திற்கு பிறகு குடும்பங்கள் குடியிருக்க தயங்கினார்கள். அதன்பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலை வந்தது.
இந்நிலையில் சென்னையில் தற்போது வந்த வெள்ளத்திற்கு பிறகு பல்வேறு பகுதிகளில் தரை தளத்தில் வசிக்கும் வீடுகளில் குடியிருப்பதை மக்கள் விரும்பவில்லை. பலரும் வீடுகளை காலி செய்ய தயாராகி வருகிறார்கள். இதனால் சென்னையில் தரைத்தளத்தில் இனி பேச்சுலர்கள் மட்டுமே குடியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ட்ரெண்ட் வெள்ள பாதிப்பை அடிக்கடி சந்திக்கும் பள்ளிக்கரணை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் வந்துள்ளதாம்.
தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலுமே பேட்சுலர்ஸ் டாப் ப்ளோரில் இருப்பார்கள்.. ஆனால் சென்னையில் மட்டும் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. கிரவுண்ட் ப்ளோருக்கு ஆள் கிடைப்பதுதான் மற்ற ஊர்களில் சுலபம், ஆனால் 2015 வெள்ளத்திற்க பிறகு சென்னையில் தரை தளத்தில் குடியிருக்க விரும்பும் பேமிலி கிடைப்பது கஷ்டமாக இருந்தது. இந்நிலையில் இப்போதைய வெள்ளம் அதை இன்னும் சிக்கலாக்கி உள்ளது. இதனால் சென்னையில் கிரவுண்ட் பிளோர் வாடகை மற்றும் லீஸ் தொகையை வீட்டு உரிமையாளர்கள் குறைத்துவிட்டனர்.
ஆனாலும் தரைத்தளத்தில் பேமிலியில் உள்ளவர்கள் குடியிருக்க விரும்பவில்லை. பலரும் காலி செய்து மாடியாக உள்ள வீடுகளில் குடியேற ஆயத்தமாகி வருகிறார்கள். பள்ளியில் சேருவது மாறுவது இப்போது முடியாது என்பதுடன், இப்போது இடைப்பட்ட காலம் என்பதால் ஏப்ரல், மே மாதங்களில் பலரும் வீடுகளை காலி செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அப்போது சென்னையில் ஏராளமான வீடுகள் தரைத்தளங்களில் காலியாக வாய்ப்பு உள்ளது. பேச்சுலர்கள் பள்ளிக்கரணை போன்ற வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் எளிதாக குறைந்த வாடகையில் குடியேற முடியும்.












Click it and Unblock the Notifications