Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி ஞாயிறுகளில் ஏடிஎம் டெபாசிட் மிஷினில் பணம் போடுவீங்களா? இதை பார்த்துவிட்டு முடிவு பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏடிஎம்களில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் போய் பணம் செலுத்துவார்கள் பலர்.. அப்படி அவர்கள் ஏடிஎம்மில் உள்ள பணம் டெபாசிட் இயந்திரம் வேலை செய்யாத நிலையை அடிக்கடி பார்த்திருப்பார்கள்.. அதற்கு என்ன காரணம் என்பதையும், ஏடிஎம்களில் பணம் செலுத்த என்ன செய்யலாம் என்பதையும் பார்ப்போம்.

வங்கிகளில் ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும் என்றால், முன்பு வங்கிக்கு போய் தான் அந்த வேலையை முடிக்க வேண்டும். பொதுத்துறை வங்கியில் பணம் போட வேண்டும் என்றால், அரைநாள் விடுமுறையே எடுக்க வேண்டிய அளவிற்கு கூட்டம் இருக்கும்.. கூலி வேலைக்கு செல்வோர்.. மற்றும் சாதாரண வேலை செய்வோர் ஒரு நாள் விடுறை எடுத்துதான் பணம் செலுத்த வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

Do you put money in the ATM deposit machine on Saturdays and Sundays Watch this and decide

ஆனால் காலம் செல்ல செல்ல வங்கிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகின.. ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிறகு பணம் செலுத்த, வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிற நிலை உருவானது.. ஒரு சில மணி நேரத்தில் வங்கி கணக்கு மூலம் இன்னொரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தக்கூடிய நிலை வந்தது.

அடுத்ததாக கூகுள் பே, போன்பே, பேடிஎம், அமேசான் பே என பல்வேறு யுபிஐ வந்த பின்னர், பணம் செலுத்த வங்கி கணக்கோ அல்லது ஐஎப்எஸ்சி கோடு என எதுவும் தேவையில்லை என்கிற நிலை உருவானது. ஸ்கேன் செய்தோ அல்லது கூகுள் பே மூலமோ, ஒரு போன் நம்பரை மட்டும் டைப் செய்து ஒரு நொடியில், உங்கள் கணக்கில் உள்ள பணத்தை, மற்றவர் வங்கி கணக்கிற்கு இப்போது மாற்ற முடிகிறது.

அதேபோல் பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் வங்கிகணக்கில் டெபாசிட் செய்ய வங்கிக்கு போக வேண்டிய அவசியமும் இப்போது இல்லை.. 24 மணி நேரமும் ஏடிஎம்களில் பணம் எப்படி எடுக்க முடியுமா, அதேபோல் பணமும் போட முடியும்.. பணம் டெபாசிட் செலுத்தும் இயந்திரங்களை முக்கிய நகரங்களில் ஓரளவுக்கு பெரிய ஊர்களில் வங்கிகள் வைத்திருக்கின்றன.

இந்த கேஸ் டெபாசிட் மெஷின் வைத்திருக்கும் ஏடிஎம்கள் cdm என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஒவ்வொரு பெரிய பகுதிக்கும் ஒரு இடத்தில் மட்டும் பணம் டெபாசிட் செலுத்தும் இயந்திரங்களை வங்கிகள் வைத்துள்ளன. ஏடிஎம்கள் 10 இருக்கும் என்றால், சிடிஎம்கள் ஒன்று தான் இருக்கும். பெரிய நகரகங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சிடிஎம் இயந்திரங்களை வங்கிகள் வைத்திருக்கும்...மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிதகளில் ஒன்றோ அல்லது இரண்டோ வைக்கப்பட்டிருக்கும்..

வங்கி விடுமுறை நாட்களில் பணம் செலுத்த வேண்டும் என்று பணம் டெபாசிட் செலுத்தும் இயந்திரங்கள் தான் ஒரே வழி.. ஆனால் அந்த இயந்திரங்கள் பொதுவாக வெள்ளிக்கிழமை இரவிலோ அல்லது சனிக்கிழமை இரவுக்குள்ளோ முழுமையாக நிரம்பிவிடுகிறது. இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிறுகளில் பணம் செலுத்த வேண்டியவர்கள் பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் தான் பல ஏடிஎம்களில் சிடிஎம் மிஷின்கள் வேலை செய்யாமல் போகின்றன.

பொதுவாக வங்கிகள் ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் வேலையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. எனவே பணம் தீரப்போகிறது அல்லது தீர்ந்துவிட்டால் அந்த நிறுவனங்கள் உடனே வந்து பணத்தை நிரப்பிவிடுகின்றன.. ஆனால் பணத்தை டெபாசிட் செய்யும் இயந்திரங்களை பொறுத்தவரை வங்கிகளின் ஊழியர்கள் தான் பணத்தை எடுக்க வேண்டும்.

ஒருவேளை சிடிஎம் மிஷின் சனிக்கிழமையே நிரம்பிவிட்டால், ஞாயிறு அன்று யாரும் பணம் போட முடியாது.. திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வந்து வங்கி ஊழியர்கள சிடிஎம்மில் உள்ள பணத்தை எடுப்பார்கள்.. அதன் பிறகே பணம் செலுத்தும் இயந்திரத்தில் உங்களால் பணம் போட முடியும்..

எனவே ஏடிஎம்களில் சனி ஞாயிறு பணம் செலுத்தியே ஆக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் முன்கூட்டியே செலுத்துவது நல்லது.. அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் கணக்கில் இருந்து பணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதுதான் ஈஸியான வழி.. ஏனெனில் பல சிடிஎம் மிஷின்கள் சனி மற்றும் ஞாயிறுகளில் வேலை செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டு சென்னையில் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+