Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போயஸ் கார்டனில் அந்த "விசும்பல்" சத்தம்.. அண்ணாமலையை நம்பி.. "உள்ளதும்" போச்சே? மொத்தமா கைவிட்ட பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் களம் அனலடித்து கொண்டிருக்க, சசிகலா என்ன ஆனார்? எங்கே இருக்கிறார்? என்ற ஆர்வம் அரசியல் களத்தில் எழுந்து வருகிறது.. இது தொடர்பான பிரத்யேக தகவல் ஒன்றும் நமக்கு கிடைத்திருக்கிறது.

அதிமுகவை ஒன்றிணைப்பதாக சொல்லிக்கொண்டேயிருந்த சசிகலாவுக்கு, தன்னுடைய முயற்சியில் ஓரளவுகூட வெற்றி கிடைக்கவில்லை.. சிறையிலிருந்து வெளிவந்ததிலிருந்தே, பாஜக மேலிடம் அவரை கண்டுகொள்ளாமலேயே இருந்தநிலையில், அதிமுகவாவது தன்னை எப்படியாவது சேர்த்து கொள்ளும் என்று காத்து கிடந்தார். ஆக, இதிலும் சசிகலாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

Does Chennai Poes Garden Sasikala get a Major role in the Lok Sabha elections 2024 and whats Annamalai Huge Plan

சமாதானம்: அதனால்தான், எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்வதற்கு பதிலாக, பேசாமல் மேலிட பாஜகவையே சந்தித்து பேசிவிடலாம் என்று முடிவுக்கு வந்தார்.. அதனால்தான், கடந்த 2 வருடங்களாகவே, ரஜினிகாந்த், விஜயசாந்தி, என்று பாஜகவுக்கு நெருக்கமாக புள்ளிகள் மூலமாக "தூது"விடும் படலமும் நடத்தி கொண்டிருந்தார். ஆக, இதிலும் சசிகலாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

இந்தசூழலில்தான், தமிழகத்தில் தேர்தல் தீவிரம் அதிகரித்தது.. தென்மண்டலங்களில் வாக்குகளை பெற்றாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு வந்திருப்பதால், சசிகலாவின் தயவையும் நிச்சயம் நாடும் என்று தகவல் வெளியானது.

எடப்பாடி பழனிசாமி: அதற்கேற்றபடி சசிகலாவும், "கட்சியின் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் எடப்பாடி பழனிசாமியே போட்டியிடட்டும், அதற்கு பதிலாக, எடப்பாடியுடன் சேர்ந்து, Bபி-பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கு வேண்டும் என்றும், கட்சியில் ஏதாவது முக்கிய பொறுப்பு வேண்டும்" என்று கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கே கடிதம் மூலமாக கோரிக்கை வைத்தாராம்.

இந்த கோரிக்கையை எடப்பாடியிடம் பாஜக தெரியப்படுத்தியதற்கு, உடனே மறுத்துவிட்டாராம். காரணம், B-பார்மில் கையெழுத்திடுபவர்தான், வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள்.. எனவே, இந்த விஷயத்தில் தேவையில்லாத சிக்கல் வந்துவிடும் என்பதால்தான், இந்த கோரிக்கையை உடனே எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டாராம். ஆக, இதிலும் சசிகலாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

கூட்டணி: தன்னுடைய ஆதரவாளர்கள் 2 பேருக்கு சீட் தந்தால், பாஜக கூட்டணிக்கு முக்குலத்தோர் வாக்குகளை பெற்றுத்தருவதாக, சசிகலா தரப்பில் பேசப்பட்டதாம். ஆனால், இந்த கோரிக்கையை பாஜக ஏற்காமல், முக்குலத்தோர் ஓட்டுக்களை பெறுவதற்கு தினகரன், ஓபிஎஸ் மட்டுமே போதும் என்ற முடிவுக்கு வந்ததுடன், கூட்டணியையும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆக, இதிலும் சசிகலாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

இப்போது சசிகலா என்ன செய்து கொண்டிருக்கிறார்? அதிமுகவில் அவரது ரோல் என்ன? நடக்க போகும் தேர்தலில் அவரது ரோல் என்ன? என்பதெல்லாம் எதுவுமே நமக்கு தெரியவில்லை.. ஆனால், "நாடாளுமன்ற தேர்தலில் தீவிர அரசியல் பணிகளை முன்னெடுப்பேன், அதிமுகவை மீட்பேன் என்றெல்லாம் சொல்லிவந்த சசிகலா, இந்த தேர்தலில் எங்கு இருக்கிறார் என்று தேட வேண்டியதிருக்கிறது என்று அதிமுகவினரே சொல்கிறார்களாம்..

அண்ணாமலை: தேர்தலில் தன்னை பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என்று மிகவும் நம்பியிருந்தார் சசிலகா, குறிப்பாக, பாஜக தலைமையின் உத்தரவின் பேரில் அண்ணாமலை தன்னை தேடி வந்து சந்திப்பார் என்றும், அதன் பிறகு பாஜக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் சசிகலா மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், சசிகலா தேவையில்லை, தினகரன் மட்டும் போதும் என முடிவு செய்து அவரை ஓரங்கட்டி விட்டது பாஜக.

இதனால் தினமும் புலம்பிக்கொண்டிருக்கிறார் சசிகலா. இப்போது அவரது இல்லத்துக்கு அவரது ஆதரவாளர்கள் வருவதும் குறைந்து விட்டதாம். இந்தநிலையில், இந்த தேர்தலில் தன்னுடைய இருப்பை வெளிக்காட்டிக்கொள்ள, டிடிவி தினகரனுக்கு பிரச்சாரம் செய்ய, அவரிடம் சசிகலாவின் உதவியாளர் பேசினாராம்.. ஆனால், தினகரனோ, "சித்தி அமைதியாக ரெஸ்ட் எடுக்கட்டும், என்னுடைய பிரச்சாரத்தை நானே பார்த்துக் கொள்கிறேன்" என மறுத்து விட்டாராம் தினகரன்.

தினகரன்: தினகரனும் ஒதுக்கிவிட்ட நிலையில், சசிகலாவின் அரசியல் கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், கடந்த தேர்தலின்போது நிலைமையே வேறு மாதிரியாக இருந்தது.

சித்தி தனக்காக பிரச்சாரம் செய்ய வர மாட்டாரா? அமமுகவின் பொதுச்செயலாளர் பதவியையும் ஏற்றுக்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க மாட்டாரா? என்றெல்லாம் ஏங்கி கிடந்தார் தினகரன்..

அவ்வளவு ஏன்? அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா அன்று அறிக்கை விட்டதுமே, பதறித்துடித்த தினகரன், அன்றைய தினம் இரவெல்லாம் தூங்காமல் தவித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த முறை தேர்தலிலோ, சசிகலா வலிய வந்தும்கூட, அவரை தவிர்த்துவிட்டு பிரச்சாரம் செய்ய முனைந்துள்ளது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது..

ஆக மொத்தம், அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் தாண்டி, எப்பேர்ப்பட்ட "சூழலையும்" மாற்றும் சக்தி, காலத்துக்கு மட்டுமே உள்ளது போலும்.. !!! பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+