நாய்கறி சர்ச்சையால் படுத்தது இறைச்சி விற்பனை.. சென்னையில் கலக்கத்தில் பிரியாணி கடைகள்!
நாய்கறி பீதி காரணமாக சென்னையில் பிரியாணி விற்பனை பெரிய அளவில் சரிந்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: நாய்கறி பீதி காரணமாக சென்னையில் பிரியாணி விற்பனை பெரிய அளவில் சரிந்து இருக்கிறது.
கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட பார்சலில் 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. இவை நாய்கறி என்று கூறப்பட்டது.
ஆனால் இப்போது வரை இது நாய்கறிதான் என்று யாரும் உறுதியாக விளக்கமளிக்கவில்லை. ஆனால் இது மக்கள் மத்தியில் பெரிய பீதியை கிளப்பி உள்ளது.

தனி விற்பனை
இதனால் சென்னையில் கறி விற்பனை பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆடு, மாடு இரண்டின் விற்பனையும் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரியாணி கடைகள் எப்படி
அதேபோல் பிரியாணி கடைகளிலும் பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை. நேற்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்தும் கூட பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை. சென்னையில் உள்ள பிரபல பிரியாணி கடைகள் கூட இதனால் பெரிய அளவில் இழப்பை சந்தித்து இருக்கிறது.

பாதிப்பு
பெரிய கடைகள் கூட இதில் எப்படியாவது தப்பித்துக் கொள்ளும் என்று கூறலாம். ஆனால் சிறிய ரோட்டோர கடைகளின் நிலைதான் பெரிய பரிதாபம். உறுதி படுத்தாமல் உலவும் தகவல் காரணமாக சிறிய சிறிய பிரியாணி கடைக்காரர்கள், எளிய மக்களின் வருகையை நம்பி இருக்கும் கடைக்காரர்கள் பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள்.

மற்ற ஊர்கள்
சென்னையிலும் ஆட்டுக்கறிதான் அதிக அளவில் விற்பனையில் சரிவை சந்தித்து இருக்கிறது. இது விற்பனையாளர்களுக்கு பெரிய கலக்கத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த சர்ச்சை காரணமாக மற்ற ஊர்களில் அசைவ விற்பனை பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை.
-
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications