Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபாகரன், நளினி பற்றி பேசினால் நடப்பதே வேற.. முன்னாள் டிஎஸ்பி அனுசுயாவிற்கு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபாகரன், நளினி பற்றி பேசினால் நடப்பதே வேற.. என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயாவிற்கு மிரட்டல் விடுத்து இலங்கை தமிழர் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வருகை தந்து இருந்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கில் 41 பேரை கைது சிபிஐ கைது செய்தது.

நளினி, முருகன், சாந்தன்

நளினி, முருகன், சாந்தன்

பூந்தமல்லியில் உள்ள சிறப்பு தடா நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை நடந்த போதே 15 பேர் இறந்தனர். மீதமுள்ள 26 பேருக்கும் பூந்தமல்லி சிறப்பு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. கடந்த 1998- ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் 19 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

ஆயுள் தண்டனையாக குறைப்பு

ஆயுள் தண்டனையாக குறைப்பு

ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்தது. பின்னர் தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக ஆளுநர் உத்தரவிட்டார். மீதமுள்ள 3 பேரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை கடந்த மே மாதம் விடுதலை செய்தது.

மறு சீராய்வு மனு தாக்கல்

மறு சீராய்வு மனு தாக்கல்

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப் போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி உள்ளிட்ட ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில் 6 பேரையும் கடந்த 11 ஆம் தேதி விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இதனைத் தொடர்ந்து நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதனை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

காவல்துறை அதிகாரி அனுசுயா

காவல்துறை அதிகாரி அனுசுயா

ஆறு பேர் விடுதலைக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒருபக்கம் வரவேற்பு தெரிவித்தாலும் மற்றொரு பக்கம் எதிர்ப்புகளும் உள்ளன. அந்த வகையில், பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி அனுசுயா, இந்த விடுதலைக்கு எதிராக கடுமையாக பேசி வருகிறார். ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பின் போது அவரது இரண்டு விரல்கள் மாயமானதோடு பல இடங்களில் குண்டுகள் பாய்ந்தது. குற்றவாளிகளை அடையாளம் கண்ட சாட்சியாகவும் அவர் இருந்தார்.

 பொய்யான தகவல்களை

பொய்யான தகவல்களை

விடுதலையான பிறகு நளினி செய்தியாளர்கள் சந்திப்பில் பொய்களை கூறி வருவதாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து அனுசுயா பேட்டி அளித்து வருகிறார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலையான நளினி, ஊடகங்களிடம் பொய்யான தகல்களைக் கூறுகிறார். இனியாவது திருந்தி வாழ வேண்டும். அவர் ஒரு துரோகி என கடுமையாக விமர்சித்து இருந்தார் அனுசுயா.

என்ன நடக்கும் என்று மட்டும் பார்..

என்ன நடக்கும் என்று மட்டும் பார்..

இதனிடையே, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயாவிற்கு இலங்கை தமிழர் ஒருவர் மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோவில், இலங்கை தமிழர் என்று சொல்லப்படும் ஒருவர் அனுசுயாவிடம் ஒருமையில் பேசி மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். அந்த ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது: தமிழீழ தேசிய தலைவர் பற்றியோ நளினி பற்றியோ பேட்டி கொடுக்க வேண்டாம். இல்லையென்றால் அதற்கு அப்புறம் என்ன நடக்கும் என்று மட்டும் பார்..

பிரபாகரனை பற்றி தேவையில்லாமல்

பிரபாகரனை பற்றி தேவையில்லாமல்

யாரைப்பற்றி வேண்டும் என்றாலும் பேட்டிக்கொடு... அது உன்னுடைய சுயநல பிரச்சினை.. ஆனால் பிரபாகரனை பற்றி பேச வேண்டாம். இல்லையென்றால் உனக்கு என்ன நடக்கும் என்று பார்.. எங்களை இளிச்சவாயன் என்று நினைக்க வேண்டாம். பிரபாகரனை பற்றி தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவரைப்போல ஒருவர் உலகத்திலேயே இல்லை. இனி வரவும் முடியது" என கடுமையாக மிரட்டல் விடுக்கும் வகையில் இந்த ஆடியோ நீள்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+