மூக்கு டூ வாய் டூ கண் டூ மூளை.. கடைசியில் மரணம்.. கருப்பு பூஞ்சை குறித்து அமர் அகர்வால் பகீர்!
சென்னை: கண்கள் சிவப்பாக இருந்தால் அது மெட்ராஜ் ஐ என எடுத்துக் கொள்ள கூடாது. கருப்பு பூஞ்சை நோயாக இருக்கும் என டாக்டர் அமர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து டாக்டர் அமர் அகர்வால் சன் நியூஸ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி: கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. சிலருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம்.
சில நோயாளிகளுக்கு கேன்சரும் கொரோனாவும் இருக்கும். நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளை அதிகம் கொடுப்பது, ஆக்ஸிஜன் பிராண வாயுவை அதிகமாக கொடுப்பது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

உடலில் தொற்றுகள்
நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது பொதுவாக உடலில் தொற்றுகள் ஏற்படும். இது அதிகளவில் ஏற்படுகிறது. அதற்கு பெயர்தான் மியூகோர்மைகோசிஸ். இந்த பூஞ்சை மூக்கிலிருந்து தொற்றுகிறது. வாய் எல்லாம் தொற்று ஏற்படுகிறது. மூக்கு, வாய் என பாதிப்பை ஏற்படுத்திவிட்டு மெதுவாக கண்களில் தொற்றை ஏற்படுத்துகிறது.

கண்களில்
இது கண்களை பாதிக்கும். முகத்தில் இருக்கும்போதும் கண்களில் இருக்கும் போது இந்த பூஞ்சையை குணப்படுத்தாவிட்டால் நேராக மூளைக்குச் செல்கிறது. அங்கு உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இது மிகவும் மோசமான தொற்றாகும். கண்கள் முழுவதும் இது தொற்றை ஏற்படுத்தும்.

சைனஸ் பகுதி
இதற்கு கருப்பு பூஞ்சை என ஏன் சொல்கிறோம் என்றால் தோலில் தொற்று ஏற்படும் போது அங்குள்ள செல்கள் இறப்பதால் தோல் கருப்பு நிறமாகிறது. மூக்கிலிருந்து சளி போல் கருப்பாகவும் வரலாம். இதனால்தான் நாம் கருப்பு பூஞ்சை என்கிறோம். சைனஸ் பகுதி, வாய் பகுதியில் தொற்று ஏற்படும்.

வித்தியாசம்
கண்களில் பாதிப்பு ஏற்பட்டால் கண்ணையே எடுக்கும் நிலை ஏற்படும். வேறு வழியில்லை. கருப்பு பூஞ்சை பாதித்த கண்ணை நீக்காவிட்டால் அங்கிருந்து மூளைக்கு சென்று நோயாளிகள் மரணிக்கும் நிலை ஏற்படலாம். தூங்காததால் கண்களை சுற்றி ஏற்படும் கருப்பிற்கும் கருப்பு பூஞ்சையால் ஏற்படும் கருப்பு நிறத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.

கண் டாக்டர்
தோலில் உள்ள செல்கள் இறந்து தோலே கருப்பு நிறத்தில் மாறிவிடும். தூக்கமின்மையால் ஏற்படும் கருப்பு நிறத்தை ஏதேனும் கிரீம் கொண்டு சரி செய்து கொள்ளலாம். உடனடியாக பார்வை போகிறது என்றால் கண் டாக்டரை அணுக வேண்டும். முதலில் கண்களில் சிகப்பாக இருந்தாலே கண் டாக்டரிடம் சென்றுவிட வேண்டும்.

தலைவலி
அது மெட்ராஸ் ஐ என எடுத்துக் கொள்ள கூடாது. தலைவலி, கண்களில் பார்வை போதல், கண் சிவத்தல் ஆகியவை இந்த நோய்க்கு அறிகுறியாகும். இந்த நோய் ஸ்டீராய்டு எடுப்பவர்களை மட்டுமே தாக்கும். ஸ்டீராய்டுகளை எடுப்பதால் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் இவை நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைத்து விடுகின்றன.

பூஞ்சை
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த பூஞ்சை எளிதிலும் நுழையும். அது போல் அதிகமாக ஆக்ஸிஜன் கொடுப்பது உள்ளிட்டோருக்கு இந்த நோய் தாக்க வாய்ப்புண்டு. அதனால்தான் சொல்கிறேன். முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்.

நன்மை
இந்த கொரோனாவை தடுக்க முதலில் தடுப்பூசி போடுவது, மாஸ்க் அணிதல், உடற்பயிற்சி செய்தல் ஆகியவை ஆகும். லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளை செய்யலாம். நன்றாக சத்துள்ள உணவை சாப்பிடுவது நன்மையை தரும் என்றார் அமர் அகர்வால்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications