மது, புகை பழக்கமே இல்லை.. ஜிம்முக்கு போனாலும் ஹார்ட் அட்டாக் ஏன்? தடுப்பது எப்படி? டாக்டர் ஒய் தீபா
சென்னை: இளைஞர்களுக்குக் கூட சர்வ சாதாரணமாக ஏற்படும் மாரடைப்பை வராமல் தடுப்பது குறித்து சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப நிபுணர் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் இன்றைய காலகட்டங்களில் சிறு வயதினருக்கும் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் இதயத்தை மேன்மைப்படுத்தும் விஷயங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதயம் என்பது தூங்கும் போது கூட வேலை செய்யும் ஒரு உறுப்பு ஆகும். இந்த இதயம்தான் நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தை கொடுக்கிறது.
இதயத்தின் செயல்பாடு குறைய காரணம் என்னவென பார்த்தால் ஆரோக்கியமற்ற உணவை எடுத்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி செய்யாமை, மன அழுத்தம் ஆகும். இதனால் இதய குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் நாம் இதயத்தை மேன்மைப்படுத்தலாம்.

ஆசனங்கள்
பத்மாசனம், தாடாசனம் (முதுகுதண்டுவடம் விரிவடைவதால் நுரையீரலின் செயல்பாடுகள் அதிகரிக்கும், இதயத்தின் செயல்பாட்டுக்கும் உகந்தது), விருக்ஷாசனம் (தோள் பட்டைகள் விரிவடைவதால் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தையும் அதன் செயல்பாட்டையும் அதிகரிக்கும்), திரிகோணாசனம், வீரபத்ராசனம் (ரத்த ஓட்டத்தையும் இதய துடிப்பையும் அதிகரிக்கும், கருவுற்ற பெண்கள் இதை செய்வதால் அவர்களின் கருவுக்கு இதயத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாக்கிறது).

எந்த உணவுகள்
உக்காடசனம் (இதயம், நுரையீரலில் செயல்பாட்டை மேன்மைப்படுத்துகிறது), மர்ஜரி ஆசனம் (உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்), புஜங்காசனம், துனுராசனம் ஆகிய ஆசனங்களுடன் இணைந்து மூச்சு பயிற்சி, தியான பயிற்சி உள்ளிட்டவைகளை செய்யும் போது இதயத்திற்கு வலிமையை அதிகரிக்கும். இதனுடன் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் பார்ப்போம்.

கெட்ட கொழுப்பு
பாதாம்- கெட்ட கொழுப்பை குறைத்துவிட்டு, நல்ல கொழுப்பை அதிகரிக்கும். தினசரி 4 பாதாம்களை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறையும். இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். காலையில் எழுந்தவுடன் நமது வயிற்றின் மீது சாதாரண தண்ணீரில் நனைத்த டவலை நான்காக மடித்து அரை மணி நேரம் போடுவதால் நமக்கு மலச்சிக்கல் ஏற்படாது. ஜீரண பிரச்சினை இருக்காது, அதே நேரம் இதய கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

மாதுளை பழம்
இதனுடன் மாதுளை பழத்தின் சாற்றையும் எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் இதயத்தில் உள்ள கொழுப்பை மேன்மைப்படுத்தும், ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் சீராக போவதற்கு உதவும். அடுத்தது பூண்டை எடுத்துக் கொள்ளலாம். இதில் ஹாலோசின் இருக்கிறது. இதனால் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. ரத்த நாளங்கள் நன்றாக விரிவடைந்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அங்குள்ள அடைப்பை நீக்கவும் பயன்படுகிறது. இது ரத்த அழுத்தத்தையும் சீராக்கும்.

ரத்தம் உறைதல்
மாரடைப்பானது ரத்தம் உறைவதாலும் ஏற்படும். இதை தடுக்கும் வல்லமை இஞ்சிக்கு உண்டு. வாயு தொல்லைகள் இல்லாமல் பாதுகாத்து ஜீரணத்தை அதிகரிக்கிறது. அடுத்தது மஞ்சள்- இதில் உள்ள குர்குமின் நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கிறது. இதயத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதுவும் ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. கால் டீஸ்பூன் பட்டை பொடி, கால் டீஸ்பூன் மஞ்சள் தூளை கொதிக்க வைத்து குடிப்பதால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கும்.

துளசி
துளசியை எடுத்துக் கொள்ளலாம், மாரடைப்பானது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் மன அழுத்ததால் ஏற்படுகிறது என நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் அல்லவா. துளசியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மன அழுத்தமும் மலச்சிக்கலும் குறைகிறது. ஒரு சிலருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் உடற்பயிற்சிகளை நன்கு செய்தாலும் அவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் தூக்கமின்மை, மன உளைச்சல் ஆகும். தூக்கம் நன்றாக வர வேண்டும் என்றால் அதற்கு தினமும் காலை, மாலை வேளைகளில் 15 நிமிடம் சூரிய வெளிச்சத்தில் நிற்க வேண்டும். இதனால் செரோட்டீன் எனும் ஹார்மோன் சுரக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மெலடோனும் சுரக்கப்படுவதால் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மது, புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். கொழுப்பு இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது, யோகா பயிற்சி, நடைபயிற்சி, மூச்சு பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து செய்வதால் மாரடைப்பு, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்டவை வராமல் தடுக்கலாம். இவற்றுடன் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் டயட் சார்ட்டையும் பின்பற்றலாம் என டாக்டர் தீபா தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications