குழந்தையின்மையா? பைசா செலவில்லாமல் அரசு மருத்துவமனையில் எண்ணற்ற சிகிச்சைகள்.. லிஸ்ட் போடும் Dr.தீபா
சென்னை: கர்ப்பப்பை குழாய்களில் அடைப்பு இருந்த பெண்ணுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் இலவசமாக சிகிச்சை அளித்து அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என கைநுட்பத் துறை மருத்துவர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா கூறியிருப்பதாவது: திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தையின்மைக்காக (infertility) பெண் ஒருவர் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவருக்கு இரு கருப்பைக் குழாய்களிலும் அடைப்பு இருந்தது. இதற்காக அவருக்கு மருத்துவர்கள் லேப்ராஸ்கோப்பி சிகிச்சையை பரிந்துரைத்தனர்.
இந்த நிலையில் அந்த பெண் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைக்கு வந்து என்னை சந்தித்தார். அப்போது அவரிடம் லேப்ராஸ்கோபி, மருந்து மாத்திரை இல்லாமலேயே இந்த கருப்பை குழாயில் உள்ள அடைப்பை சரி செய்ய முடியும் என்றேன்.

புறநோயாளி
என்னிடம் புறநோயாளியாக சிகிச்சைக்காக வந்த அந்த பெண்ணை சோதனை செய்ததில் ஒரு டியூபில் நீர் இருந்தது. மற்றொரு டியூபில் மொத்தமாக அடைப்பு இருந்தது. குழந்தையின்மைக்கு ஐயூஎஃப் சிகிச்சைகள் மூலமாகத்தான் கருத்தரிக்க முடியும் என கூறியிருந்ததாக அந்த பெண் என்னிடம் சொன்னார். இதையடுத்து மருத்துவமனையில் 20 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் சரியாகிவிடும் என்றேன்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவம்
அவருக்கு நான் கூறியது போல் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அவருக்கு இயற்கையான உணவுகள் கொடுக்கப்பட்டன. மேலும் இடுப்பு குளியல், மண் குளியல், வாழை இலை குளியல், களிமண் குளியல் ஆகிய சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன.

மூச்சு பயிற்சி
அது போல் பிராணயாமம், மூச்சு பயிற்சி, அக்குபஞ்சர், விதை சிகிச்சை உள்ளிட்டவை அவருக்கு கொடுக்கப்பட்டது. விளக்கெண்ணெய் சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைகளுடன் இயற்கை உணவையும் அவர் எடுத்துக் கொண்டார். 20 நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்பினோம். அங்கும் அவரை இயற்கையான உணவை எடுத்து வர சொன்னேன்.

மண் குளியல்
மண் குளியலுக்கு பதிலாக டர்க்கி டவலை மடித்து வயிற்றின் மீது அரை மணி நேரம் வைத்த வர சொன்னேன், அதனுடன் இடுப்பு குளியலையும், யோகாவையும் செய்ய கூறினேன். இதனால் அந்த பெண் கருத்தரித்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவரது பரிந்துரையின்பேரில் இவருக்கு தெரிந்த குழந்தையின்மைக்கு சிகிச்சை பெறுவோரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களும் தற்போது கருத்தரித்து நார்மல் டெலிவரி ஆகியுள்ளது.

ரத்த கட்டி
என்டோமெட்ரோசிஸ் எனப்படும் ரத்த கட்டி, கருப்பை குழாயில் அடைப்பு, மாதவிடாய் காலத்தில் உதிரம் அதிகமாக போவதால் ஹார்மோன் சமநிலையின்மையால் பிசிஓடி பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினை இருக்கிறவர்களுக்கு இயற்கை மருத்துவம் மூலம் மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையாகவே கருத்தரிக்கலாம். கருப்பையில் கட்டி இருப்பவர்களும் கருத்தரிக்கலாம் என தீபா தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications