களமிறக்கப்பட்ட டிரோன்கள்! சென்னையில் ஒவ்வொரு தெருவிலும் திடீர் ரெய்டு! காரணத்தை கேட்டா அசந்துடுவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஒவ்வொரு சாலை பகுதிகளிலும் தற்போது டிரோன் மூலம் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. ஏன் இந்த ரெய்டு என்று பார்க்கலாம்..

Recommended Video

    Chennai தெருக்களில் களமிறக்கப்பட்ட Drone.. இதுதான் காரணமா?

    கடந்த சில நாட்களுக்கு முன் கழிப்பறைகளை கண்டுபிடிக்கும், அதற்கு ரேட்டிங் கொடுக்கும் செயலியான கக்கூஸ் ஆப் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. Recycle Bin, Cheer NGO போன்ற அமைப்புகள் மூலம் நடத்தப்பட்ட நிகழ்வில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மூலம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

    சென்னையில் எங்கு நல்ல கழிப்பறைகள் உள்ளன, எங்கு கழிப்பறைகள் சரியான நிலையில் இல்லை என்பதை இந்த கக்கூஸ் ஆப் மூலம் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

    சென்னை கழிப்பறை

    சென்னை கழிப்பறை

    இந்த நிலையில்தான் புதிய முயற்சியாக சென்னையில் எவ்வளவு கழிப்பறைகள் உள்ளன என்று சர்வே செய்வதற்காக இந்த டிரோன் ரெய்டு நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். சென்னையில் விதிப்படி ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு கழிப்பறை இருக்க வேண்டும். அதாவது மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்ட இலவச மாடர்ன் கழிப்பறை அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    டிரோன் சென்னை

    டிரோன் சென்னை

    சாலைகள், பேருந்துகள் செல்ல கூடிய வழிகள் அனைத்திலும் இந்த கழிப்பறைகள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் சென்னையில் சில இடங்களில் இப்படி கழிப்பறைகள் இல்லை. இதை கண்டுபிடிப்பதற்காக இப்போது டிரோன்கள் களமிறக்கப்பட்டுள்ளன. டிரோன்கள் மூலம் 500 மீட்டர் இடைவெளியில் கழிப்பறைகள் உள்ளதா என்று கண்டுபிடிக்கப்படும். கழிப்பறைகள் இல்லாத இடங்கள் அடையாளம் காணப்பட்டு லிஸ்ட் எடுக்கப்படும்.

    கட்டுமானம்

    கட்டுமானம்

    அதன்படி முதல் கட்டமாக 84 இடங்களில் கழிப்பறைகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு விரைவில் கட்டுமானம் தொடங்கும். இது போக ராயபுரம் பகுதியிலும்,திருவிக நகர் மற்றும் மெரினா பீச் பகுதிகளிலும் 252 கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது. மெரினாவில் மட்டும் மொத்தம் 11 இடங்களில் புதிய கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன. மற்ற இடங்களில் டிரோன்கள் மூலம் 500 மீட்டருக்கு ஒரு கழிப்பறை இருக்கிறதா என்று கணக்கெடுப்பு செய்யப்படும்.

    நல்ல முன்னெடுப்பு

    நல்ல முன்னெடுப்பு

    இது போக பாண்டி பஜார் போன்ற இடங்களில் ஏற்கனவே உள்ள தனியார் கட்டிடங்கள், துணி கடைகளில் கழிப்பறை இருக்கிறதா அது சுத்தமாக இருக்கிறதா என்று சோதிக்கப்படும். இந்த முறை அமைக்கப்பட உள்ள கழிப்பறைகள் புதிய மாடர்ன் வடிவில் இருக்கும். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இந்த புதிய டிசைனுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். புதிய கழிப்பறைக்கான கட்டுமானம் மே மாதம் தொடங்க உள்ளது.

    சர்வே

    சர்வே

    இதற்கான டெண்டர் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு டிரோன்கள் மூலம் இடங்கள் அடையாளம் காணப்பட்டு இந்த கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது. இந்தியா முழுக்கவே பெண்களுக்கு நல்ல கழிப்பறை இல்லாத நிலை உள்ளது. பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் கூட இதுதான் நிலையாக இருக்கிறது. அதை சரி செய்யும் வகையில்தான் இப்போது சென்னையில் மாநகராட்சி மூலம் இந்த சர்வே எடுக்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+