ஸ்டாலின் முதல்வரானதற்கு துர்கா ஸ்டாலினின் உருக்கமான வேண்டுதலே காரணம்.. ஜெ. உதவியாளர் பதிவு!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானது அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் உருக்கமான வேண்டுதலே காரணம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து பூங்குன்றன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில்
உருகும் பக்தி உயர்வைத் தரும்!
பக்தி யாரிடம் உணர்வுப்பூர்வமாக இருக்கிறதோ அவர்களுக்கு கடவுள் கருணை புரிவான் என்பதற்கு ஸ்டாலினின் பதவி ஏற்பு நிதர்சனம்.
முதலமைச்சர் என்ற பதவி ஸ்டாலினின் ஜாதகத்தில் இல்லை என்று அடித்து சொல்லியவர்கள் பலர். ஆனால், அனைத்தையும் கடந்து எப்படி முதல்வர் ஆனார்.

ஜோதிடம்
ஒருமுறை பகவான் கிருஷ்ணரிடம், பக்தர் ஒருவர் ஜோதிடம் உண்மையா? என்று கேட்க, கிருஷ்ணர் அதில் என்ன சந்தேகம் என்றார். அப்படி என்றால், ஜோதிடர் சொல்லும் அனைத்தும் அப்படியே நடப்பதில்லையே ஏன்? என்று ஆர்வத்தோடு கேட்டாராம் பக்தர். ஜோதிடர் சொல்லியதெல்லாம் நடந்துவிட்டால் நான் எதற்கு என்றாராம் கிருஷ்ணர். இறைவனே மிகப் பெரியவன் என்று உணர்ந்து, தெளிந்தாராம் பக்தர்.

ஜெ.மறைவு
அம்மாவின் மறைவிற்குப் பிறகு நான் நிறைய கோயில்களுக்கு சென்று கொண்டிருக்கிறேன். நிறைய கோயில்களில் உள்ளன்போடு வந்து பூஜை செய்கிறார் துர்கா அம்மா என்றார்கள் குருக்கள். அதில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் பைரவரும் உண்டு. காசி கால பைரவரும் உண்டு.

முதல்வர் கணவர்
அப்படி தன் கணவனை முதல்வராக்கியே தீருவேன் என்று அவர் முறையிட்டது மனிதரிடம் இல்லை, கடவுளிடம்! பக்தையின் பக்தியில் உருகிய கடவுள் இன்று அவர் கனவை நிறைவேற்றித் தந்து இருக்கிறார். நான் பலரிடம் அவர் முதல்வரானால் அதற்கு மனைவியின் பக்திதான் காரணமாக இருக்கும் என்று சொல்லி வந்தேன்.

ஜெயமானது பக்தி
மே 7-ஆம் தேதி பக்தி ஜெயம் கண்டது. கணவன் பக்தி, கடவுள் பக்தி இரண்டுமே சேர்ந்து வெற்றி விழா பூண்டிருக்கிறது. பதவியேற்பு விழாவில் இறைவனை நினைத்து அவர் உருகியது, என்னையும் உருக வைத்தது. மனம் உருகும் பக்தி...! கொண்டவரை உயர்த்தும். எனவே, மனம் உருகிப் பக்தி செய்யுங்கள் என தனது பேஸ்புக்கில் அவர் தெரிவித்துள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications