உங்க மேல் விழுந்த பிளாக் மார்க்.. அமலாக்கத்துறையை சரமாரியாக கேள்வி கேட்ட "டெல்லி".. என்ன நடந்தது?
சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் டெல்லி விசாரணை நடத்தியிருக்கிறது. அழுத்தமான வாதங்களை எடுத்துச் சொல்ல முடியாதா? பொய் பேசாதீர்கள் என கோர்ட் கேட்பது உங்கள் நடவடிக்கையின் மீது விழுந்த ப்ளாக் மார்க்னு தெரியுமா? என்கிற ரீதியில், அமலாக்கத்துறையினரிடம் டெல்லி கேள்வி கேட்டுள்ளதாம்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

தமிழக அரசு வழக்கு
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனைகளுக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் போது, அமலாக்கத் துறை சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை மறுத்துப் பேசிய நீதிபதிகள், ''பொய் பேசாதீர்கள். என்ன நடந்தது என்பது செய்திகளில் விரிவாக வந்துள்ளது. நீங்கள் ரெய்டு நடத்திய விதம் தவறானது. அரசு முன் வைத்த குற்றச் சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும்'' என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டதுடன், விரிவான பதில் மனுத்தாக்கல் செய்யப்படும் வரை அமலாக்கத் துறையின் மேல் நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தனர்.
அமலாக்கத்துறைக்கு நெருக்கடி
பாஜகவுக்கு எதிரான மாநில அரசு மற்றும் கட்சிகளுக்கு நெருக்கடித்தரும் நடவடிக்கைகளுக்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி வருகிறது என்கிற திமுக அரசின் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில், நீதிபதிகளின் கேள்விகள் எதிரொலித்தன. அமலாக்கத்துறைக்கு எதிரான திமுக அரசின் இந்த வழக்கின் விசாரணையை முழுமையாக கவனித்திருக்கிறது மத்திய உளவுத்துறை. கோர்ட்டில் நடந்த வாதங்கள் மற்றும் நீதிபதிகளின் கருத்துக்கள் அனைத்தையும் நோட் பண்ணி, அதனை ஒரு ரிப்போர்ட்டாகவே டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர் உளவுத்துறையினர்.
இதனையடுத்து, உள்துறை வழியாக மத்திய நிதியமைச்சகத்துக்கு அந்த ரிப்போர்ட் பாஸ் ஆன் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோர்ட்டில் நடந்த விசாரணையை முழுமையாக அறிந்த மத்திய நிதியமைச்சக அதிகாரிகள்., அது குறித்து சென்னையிலுள்ள அமலாக்கத்துறையினரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதாவது, உங்களின் நடவடிக்கைகளை நீதிபதிகள் கேள்வி கேட்கும் வகையில்தான் உங்களின் ரெய்டுகள் இருக்குமா? விசாரணையில் ஆழமான, அழுத்தமான வாதங்களை எடுத்துச் சொல்ல முடியாதா? பொய் பேசாதீர்கள் என கோர்ட் கேட்பது உங்கள் நடவடிக்கையின் மீது விழுந்த ப்ளாக் மார்க்னு தெரியுமா? என்கிற ரீதியில், அமலாக்கத்துறையினரிடம் டெல்லி கேள்வி கேட்டுள்ளதாம்.
இதனால், அடுத்த ஹியரிங்கில் தாக்கல் செய்யப்படும் பதில் மனுவில், திமுக அரசு வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையிலும், அமலாக்கத்துறையின் இமேஜை உயர்த்தும் வகையிலும் விளக்கமும் பதிலும் இருக்குமாம். அதற்கேற்ப மனுவை தயாரித்து வருகின்றனர். ஒருவேளை திங்கள் கிழமைக்குள் மனு தயாரிப்பு முடியவில்லை எனில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கவும் ரெடியாகிற தாம் அமலாக்கத்துறை












Click it and Unblock the Notifications