"நாறிடுவீங்க".. ஆர்.எஸ். பாரதிக்கு தெரியாதா.. தலைவாசலில் பொங்கிய எடப்பாடி பழனிசாமி.. காரணம் இதுதான்
எடப்பாடி பழனிசாமி தலைவாசலில் ஆர்எஸ் பாரதிக்கு பதிலடி தந்துள்ளார்
சென்னை: "பழைய பழனிசாமி" என்று குறிப்பிட்டு திமுகவின் ஆர்எஸ் பாரதி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மீண்டும் ஆர்எஸ் பாரதிக்கே, எடப்பாடி பழனிசாமி தலைவாசலில் பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.. இதற்கெல்லாம் காரணம், எடப்பாடி அன்று சொன்ன, அந்த ஒற்றை வார்த்தைதான் என்றும் கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேசியது அனைத்து கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தது..
அதுவரை மறைமுக தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அப்போது ஓபிஎஸ்ஸை முதல்முறையாக நேரடியாக அட்டாக் செய்து பேசினார்.

கைக்கூலிகள்
அதேசமயம், திமுகவையும் அதிகமாகவே சாடியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. " சில எட்டப்பர்கள் உடனிருந்தே அதிமுகவிற்கு துரோகம் செய்கிறார்கள்.ஓபிஎஸ் எப்போதும் சுயநலமாகச் செயல்படுபவர்.தனக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைக்கக் கூடாது என நினைப்பவர்.. திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார்... எங்களின் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்" என்று பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

ஆர்எஸ் பாரதி
"என்னை இன்னும் பழைய பழனிசாமி என நினைத்தீர்களா ஸ்டாலின் அவர்களே, நடக்காது" என்று எடப்பாடி அப்போது கூறியிருந்தார்.. இதற்கு திமுகவே பதிலடி தந்தது.. அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய ‘தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்' எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் திமுகவை சுரண்டிப் பார்த்திருக்கிறார்.. பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார்; புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார். பழைய பழனிசாமி ஜெயலலிதா - சசிகலாவை நம்பி இருந்தனர். புது பழனிசாமி மோடி - அமித்ஷாவை நம்பி இருக்கின்றனர் என்று அறிக்கை விட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.

அபகரிப்பு
இந்த நிலையில், சேலம் தலைவாசலில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, "தமிழகத்தில் வேண்டுமானால் திமுக ஆட்சியாக இருக்கலாம்.. ஆனால் சேலத்தில் அதிமுக தான். கட்சி அலுவலகமான எம்.ஜி.ஆரின் சொத்தை சிலபேர் அபகரிக்க பார்க்கின்றனர். அதிமுக உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை அதனை தொட்டுப்பார்க்க முடியாது... ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தை வைத்து அதிமுகவை செயல்பட விடாமல் முடக்க பார்க்கிறார்.

காலச்சக்கரம்
ஸ்டாலின் அதிமுகவின் ஒரு தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. துரோகிகளும், திமுகவும் சேர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்க நினைத்தால் நடக்காது. காலச்சக்கரம் சுழன்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்... இப்போது அமைச்சர்களாக இருக்கும் 13 பேர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது திமுகவின் ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியாதா?

நாறிப்போய்விடுவார்கள்
அவர் கட்சியில் இருந்து கைவிடப்படும் சூழலில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் பேசி கட்சியில் பொறுப்பு வகிக்க பார்க்கிறார். நாங்கள் பேச ஆரம்பித்தால், திமுக தலைவர்கள் நாறிப்போய்விடுவார்கள். அதிமுக தொண்டர்கள் உழைத்து வாழ்பவர்கள், அன்னக்காவடிகள் கிடையாது, திமுகவை போன்று சுரண்டி வந்தவர்கள் கிடையாது" என்று காட்டமாகவே எடப்பாடி பேசியிருக்கிறார்.

பஞ்ச் டயலாக்
எடப்பாடி இந்த அளவுக்கு கொந்தளிக்க காரணம், பழைய பழனிசாமி என்ற வாசகத்தை கிண்டல் செய்து அறிக்கை விட்டதுதான்.. அரசியல் கட்சிகளை பொறுத்தவரை, "பஞ்ச் வசனங்கள்" பெருமளவில் மக்களிடம் வெகுசீக்கிரத்தில் எடுபட்டுவிடும்.. அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி தெரிந்தோ, தெரியாமலோ பழைய பழனிசாமி என்று வார்த்தையை விட, அது எதிர்பாராத விதமாக வைரலாகி கொண்டிருக்கிறது.. பழைய பழனிசாமி என்பதை வைத்து சோஷியல் மீடியாவில் மீம்ஸ்களும் வெளியாகின..

பழைய பன்னீர்செல்வம்
காரணம், "பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வாருங்கள்" என்று எப்போதுமே விஜயகாந்த்துக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுப்பது வழக்கம். ஆனால், பழைய பன்னீர்செல்வம், தற்போது, "பழைய பழனிசாமி"யாக மாறிவிட்ட நிலையில், அது தொடர்பான மீம்ஸ்களும் வெளியாகிவிட்டன.. "அப்படின்னா பழைய பன்னீர்செல்வம்(ஓபிஎஸ்)" எங்கே? என்று கேட்டு மீம்ஸ்களை தெறிக்க விட்டனர்.. இதனிடையே, அதிமுகவின் ஐடி டீமே இந்த வசனத்தை சோஷியல் மீடியாவில் பிரபலமாக்க தொடங்கிவிட்டதாம்.. போதாக்குறைக்கு, திமுகவும் இதற்கு பதிலளிக்க, "பழைய பழனிசாமி" பஞ்ச் வசனம் எதிர்பாராத விதமாக எடப்பாடிக்கு பலத்தையும் தந்து வருகிறதாம்.. !












Click it and Unblock the Notifications