ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! ரவுடி திருவேங்கடம் மீது போலி என்கவுன்ட்டரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காவல் துறையினருக்கு நிறைவேற்றுவதாக சொன்ன வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற நோக்கத்தோடு பொற்கால ஆட்சியை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தினார். ஆனால் தற்போது கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.
தமிழகத்தில் எம். சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வை குறைக்க போதிய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் இவற்றின் விலையில் ஆயிரம் ரூபாய் குறைத்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "எம் சாண்ட் ஜல்லி விலையை யூனிட்டுக்கு ரூ 1900 உயர்த்திவிட்டு ரூ 1000 மட்டும் குறைத்திருப்பதாக சொல்வதை எப்படி ஏற்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், பொல்லாத ஆட்சிக்கு பொளாச்சியே சாட்சி. துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.
ஊழல் வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழக உரிமைகளை அடகு வைத்தவர்கள். கடந்த 12 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில்தான் கொலைகள் குறைவாக நடந்துள்ளன. 15,892 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் காவல்துறை மரணங்கள் அடியோடு குறைக்கப்பட்டுள்ளன என்றார் முதல்வர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் கோர்ட்டில் பேசுவதை தடுக்க என்கவுன்ட்டர் செய்யப்பட்டாரா? உண்மை குற்றவாளியை காப்பாற்ற போலி என்கவுன்ட்டரா? ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது திருவேங்கடம் சுடப்பட்டதாக கூறப்பட்டது.
கொலைக்கு அரிவாள் பயன்படுத்திய நிலையில் திருவேங்கடம் எப்படி அரிவாள் வைத்திருந்தார்? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றார். மேலும் அதிமுகவினருக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு, ஒரு மணி நேரம் பேசிவிட்டு வாய்ப்பே கொடுக்கவில்லை என சொல்வது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications