ஆடியோ சர்ச்சை.. அலட்டிக்கொள்ளாத எடப்பாடி! அந்த ”3 பேருக்கும்” பதவி - ஓபிஎஸ் தரப்பு “ஷாக்”
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.பி.முனுசாமி சதி செய்து வருவதாகவும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருப்பதாக பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில், மூவருக்குமே முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
Recommended Video
ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு முட்டுக்கட்டைகளை கடந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

பொன்னையன் ஆடியோ
எடப்பாடி பழனிசாமி ஒரு வழியாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும், பொதுக்குழு நிகழ்வுகள் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அந்த வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பொன்னையனின் தொலைபேசி உரையாடலை பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். இதற்கு பொன்னையன் மறுப்பு தெரிவித்தாலும் அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கே.பி.முனுசாமி மீது விமர்சனம்
குறிப்பாக "கே.பி.முனுசாமி திமுகவை விமர்சிப்பதில்லை என்றும், துரைமுருகன் உதவியுடன் குவாரியை பெற்று மாதம் 2 கோடி வருமானம் ஈட்டுகிறார் கே.பி.முனுசாமி. கொள்ளையடித்து கோடீஸ்வரனாக இப்படி ஆடுகிறார்கள். கே.பி.முனுசாமி நக்சலைட்டாக இருந்தவர். தேவாரம் டிஜிபி இதை சொன்னதால் ஜெயலலிதாவே அவரை ஒதுக்கினார். நாளை கே.பி.முனுசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வரலாம். அப்படி ஒரு முயற்சி நடக்கிறது." என்று பேசினார்.

வேலுமணி, சி.வி.சண்முகம்
அதேபோல், "சி.வி.சண்முகத்தின் சமுதாயத்தை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளார்கள். கொங்கு மண்டலத்தை சேர்ந்த 42 எம்.எல்.ஏக்களில் எடப்பாடி பழனிசாமிக்கு 9 பேர்தான் ஆதரவு. மீதி இருக்கும் எம்.எல்.ஏக்களை தங்கமணியும், வேலுமணியும் தங்கள் கைகளில் வைத்து உள்ளார்கள். இதனால் எடப்பாடிக்கு வேறு வழியில்லை. முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக எடப்பாடி, வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் எல்லோரையும் கையில் வைத்துள்ளார்." என்று கூறினார்.

எடப்பாடி கொடுத்த ட்விஸ்ட்
பொன்னையன் பேசிய இந்த ஆடியோ அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்பார்த்தது. அது பெரும் விவாதப் பொருளானாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஆடியோவில் இடம்பெற்ற கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று முறையே துணை பொதுச்செயலாளர், தலைமை கழக செயலாளர், அமைப்புச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், பொன்னையன் அனைத்துல எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications