Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீர்ப்பு தந்த உற்சாகம்! ஜெயலலிதா பிறந்தநாள் பவள விழா மாநாடு! எடப்பாடி பழனிசாமி போடும் மெகா திட்டம்!

ஜெயலலிதா 75வது பிறந்தநாள் பவள விழா மாநாடு பற்றி எடப்பாடி பழனிசாமி யோசனை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் கிடைத்த தீர்ப்பை தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பிறந்தநாள் பவள விழா மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்.

இதன் மூலம் சோர்ந்து கிடக்கும் அதிமுக தொண்டர்களை எழுச்சி பெற வைக்கவும், உற்சாகம் கொள்ள வைக்கவும், தனது பலத்தை மீண்டும் டெல்லிக்கு நிரூபிக்கவும் மாநாடு பயன்படும் என நினைப்பதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு இது தொடர்பாக மேலும் விரிவான ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிரித்த முகம்

சிரித்த முகம்

அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்த நொடி முதல் சிரித்த முகத்துடன் பூரிப்பாக காணப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. தன்னை சந்திக்க வருபவர்களிடம் எல்லாம் அன்பொழுக பேசியும், சிரித்தும் அவர்களை அனுப்பி வைக்கிறார். இன்று கூட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பிரம்மாண்ட கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு அதனை தனது கையாலேயே பகிர்ந்து கொடுத்தார்.

75வது பிறந்தநாள்

75வது பிறந்தநாள்

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் என்பதால் இதனை பவள விழாவாக மிகப் பெரிய அளவில் அதிமுக கொண்டாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணியில் முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதால் மிகவும் எளிமையாக கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே தீர்ப்பு தந்த உற்சாகத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை பவள விழா மாநாடாகவோ, பொதுக்கூட்டமாகவோ நடத்த விரும்புகிறார்.

பலத்தை நிரூபிக்கலாம்

பலத்தை நிரூபிக்கலாம்

இதன் மூலம் தனது பலம் என்ன என்பதை டெல்லிக்கு நிரூபிக்கலாம் என்பதோடு அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகத்தை கரைபுரள வைக்கலாம் எனக் கணக்கு போடுகிறார். ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஏராளமாக செலவு செய்திருப்பதால் மீண்டும் மாநாடு, பொதுக்கூட்டம் என நடத்தினால் அதற்கு செலவு பிரச்சனை வரக்கூடுமோ என்பதையும் அவர் கவனத்தில் கொண்டிருக்கிறாராம்.

இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு

இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு


இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு, ஜெயலலிதா பிறந்தநாள் பவளவிழா மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுடன் மேலும் விரிவான ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+