ஜி20.. முகம் முழுக்க பொங்கி வழியும் சிரிப்பு.. டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகம் முழுக்க சிரிப்புடன் அதிமுக சார்பில் நான் பங்கேற்பதில் மகிழ்ச்சி என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக தற்போதே அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

அதாவது இந்தியாவில் 200 இடங்களில் ஜி 20 ஆலோசனை கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஜி 20 ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். அது போல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இந்த அழைப்புக் கடிதம் சென்றிருக்கிறது. அந்த வகையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கே அழைப்புக் கடிதம் சென்றுள்ளது.

டெல்லி தலைமை

டெல்லி தலைமை

டெல்லி தலைமை மூலம் தான்தான் அதிமுக என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளதால் எடப்பாடி கேம்ப் பயங்கர குஷியில் இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆவது ஆண்டு நினைவுநாளான இன்று எடப்பாடி பழனிசாமி அவருடைய நினைவிடத்திற்கு சென்று அங்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஜெயலலிதா நினைவிடம்

ஜெயலலிதா நினைவிடம்

இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து நேராக சென்னை விமான நிலையத்திற்கு சென்றார் ஓபிஎஸ். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக சார்பில் பிரதமர் தலைமையிலான ஜி20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு முகம் எல்லாம் புன்னகையாகவே இருந்தது.

எடப்பாடி ஆதரவாளர்கள்

எடப்பாடி ஆதரவாளர்கள்

சென்னை விமான நிலையத்தில் திரண்ட எடப்பாடி ஆதரவாளர்கள், ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தனர். எடப்பாடி பழனிசாமியை அதிமுக என டெல்லி தலைமை அங்கீகாரம் செய்துள்ளதை பார்க்கும் போது ஏதோ ஒரு பச்சை சிக்னல் கிடைத்தாகவே கருதப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்திவிட்டு சென்றதும் அங்கு ஓபிஎஸ் ஒரு பெரும் படையையே திரட்டி கொண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்.

உறுதிமொழி

உறுதிமொழி

உறுதிமொழி ஏற்புக்கு பிறகு பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்திப்பாரா. அவர் என்ன பேசுவார் என்பதெல்லாம் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்போது அவரிடம் எடப்பாடிக்கான அழைப்புக் கடிதம் குறித்தும் கோவை செல்வராஜ் விலகல் குறித்தும் கேள்வி எழுப்பப்படும். அதற்கு ஓபிஎஸ் என்ன மாதிரியான பதிலை தருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+