விஜய்க்கு லாக்.. கூட்டணிக்கு யார் வரலாம்ன்னு நான் முடிவெடுப்பேன்! நயினாரிடம் உறுதியாக சொன்ன எடப்பாடி
சென்னை: அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இணையலாம் என்பதை பற்றி தானே முடிவு எடுப்பேன் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பாஜக நயினாரிடம் சில விஷயங்களை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக கூட்டணி பற்றி ஆலோசனைகளை இவர் செய்தார். இருவருக்கும் இடையே தனியாக நடந்த சந்திப்பில் நயினார் நாகேந்திரனிடம் எடப்பாடி பழனிசாமி சொன்னதாக முக்கியமான விஷயங்களை சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி நயினார் நாகேந்திரன்
எடப்பாடி நயினாரிடம் பேசுகையில், கூட்டணியில் யார் இணையலாம் என்பதை அதிமுகவே முடிவு எடுக்கும். அதிமுக கூட்டணியில் பாஜக மட்டும் இருந்தால் போதும். வேறு கட்சிகளை கொண்டு வர பாஜக நினைக்க வேண்டும். அதிமுகவே கூட்டணி பேச்சுவார்த்தைகளை செய்யும்.
எந்தெந்த கட்சி உள்ளே வரலாம் என்பதை பாஜக முடிவு செய்ய கூடாது. அதிமுகவே முடிவு செய்யும். வேண்டுமென்றால் இடஒதுக்கீடு பேச்சுவார்த்தைகளில் அதிமுக உடன் பாஜக இணையலாம். ஆனால் மற்றபடி கூட்டணிக்கு யார் வரலாம் என்று பாஜக முடிவு செய்ய கூடாது.. இடஒதுக்கீடு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அதிமுகவே முடிவு செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி நயினார் நாகேந்திரனிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி கேட்டது என்ன?
அமமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை கூட்டணியில் இணைக்க எடப்பாடி எதிர்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வரவும் விஜய் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தவெக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் எடப்பாடி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் மறுப்பு
ஆனால் ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் நயினார் நாகேந்திரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுக பொதுக்குழு பற்றி பேசினேன். அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வரவேற்று பேசினேன். மற்றபடி கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தவெக எடுத்த தீர்மானம்
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில், ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் "தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு" அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது, என்று கூறப்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இணையலாம் என்பதை பற்றி தானே முடிவு எடுப்பேன் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications