எதிர்க்கட்சி தலைவராக தேர்வுசெய்யப்பட்ட பின்... ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இபிஎஸ்
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராகக் கடந்த 7ஆம் தேதி பதவியேற்றார்.

இந்தத் தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளில் வென்று, பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரைத் தேர்ந்தெடுக்க அலுவலகத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இருப்பினும், இந்த முடிவில் ஒ பன்னீர்செல்வத்திற்கு முழு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து அவர் கடுகடுத்த முகத்துடனேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தைச் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications