தேர்தலை நடத்தலாம்! ஆனா முடிவுகளை வெளியிடாதீங்க! கோர்ட் உத்தரவு எடப்பாடி- ஓபிஎஸ்ஸில் யாருக்கு சாதகம்?
24-ல் தீர்ப்பு வழங்கப்படும், அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எடப்பாடிக்கு சாதகமா, ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றோடு நிறைவு பெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் ரூபாய். 27ஆம் தேதி காலை 9 மணி முதல் வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் என்று அதிமுக தலைமை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது இந்த தேர்தலுக்கு எதிராக இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்துள்ளார்.

தடை இல்லை
இந்த வழக்கில் மார்ச் 22ம் தேதி வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது இப்போது தேர்தலை நடத்தலாம். தேர்தல் பணிகளில் உயர் நீதிமன்றம் தலையிடவில்லை. ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்யலாம் என்பது போன்ற கூடுதல் அறிவிப்புகளை வெளியிடவில்லை. தேர்தல் நடக்கும்படி நடக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. எனவே திட்டமிட்டபடி பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கும்.

தேர்தல் முடிவுகளை மட்டுமே வெளியிட வேண்டாம்
ஆனால் தேர்தல் முடிவுகளை மட்டுமே வெளியிட வேண்டாம் என்று மட்டுமே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. அதில் வேகமான விசாரணையை மேற்கொள்வோம். அந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ல் விசாரணை செய்யப்படும். 24-ல் தீர்ப்பு வழங்கப்படும், அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று நடக்கும் நடைமுறைக்கு தடையில்லை
மொத்தத்தில் இந்த வழக்கு உத்தரவு எடப்பாடிக்கு சாதகமா, ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த உத்தரவு இரண்டு பேருக்குமே சாதகமான விஷயம்தான். தேர்தலுக்கு தடை இல்லை. தேர்தல் நடக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. முடிவுகளை மட்டுமே 22ம் தேதி வரை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது எடப்பாடிக்கு ஒரு ப்ளஸ்
பாயிண்ட். ஏனென்றால் எடப்பாடியை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வாய்ப்புகள் குறைவு.
பாயிண்ட். ஏனென்றால் எடப்பாடியை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வாய்ப்புகள் குறைவு.

இறுதி கிளைமேக்ஸ்
அதனால் அவர் போட்டியின்றி வெற்றி அடைவார். என்ன ஒன்று அந்த வெற்றியை எடப்பாடி அறிவிக்க முடியாது. மற்றபடி அவர்தான் பொதுச்செயலர் என்று தெரிந்துவிடும். எனவே இந்த உத்தரவு எடப்பாடிக்கு சாதகம்தான். ஆனால் இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ல் விசாரணை செய்யப்படும். 24-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. இது ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகம். அதன்படி ஒருவேளை இந்த 24ம் தேதி தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்களை ஓ பன்னீர்செல்வம் எதிர்த்தது சரி.. தீர்மானங்கள் செல்லாது அல்லது சிவில் கோர்ட் இதில் விசாரிக்கும் வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என்று உத்தரவு போடப்பட்டால் அது ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக அமைந்துவிடும். மொத்தத்தில் இன்று வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு இரண்டு பேருக்குமே சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications