ஆட்டம் ஆரம்பம்! எடப்பாடிக்கு கிடைத்த அந்த ஷாக் தகவல்! அதிமுகவில் அரங்கேறும் புது புது டிவிஸ்ட்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமைக் கழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க திரண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் கட்சிக்காரர்களே இல்லை என்ற தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு எட்டியுள்ளது.

இதன் காரணமாகவே அதிமுக தலைமைக் கழகத்துக்கு செல்லும் பயணத் திட்டத்தையே அவர் ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்ற பெயரில் அதிமுக தலைமைக் கழகத்தில் குவிந்துள்ளவர்களின் பின்னணியை தனி டீமை வைத்து ஆராயத் தொடங்கிவிட்டது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

பரபரப்பு காட்சிகள்

பரபரப்பு காட்சிகள்

அதிமுக தலைமைக் கழகத்தில் காலை முதலே அரங்கேறி வரும் ஒவ்வொரு காட்சிகளும் சினிமா படங்களை மிஞ்சும் வகையிலேயே இருந்தன. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்ற பெயரில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத பலர் அங்கு குவிந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் சென்ற சிறிது நேரத்தில், அவரது ஆதரவாளர் மாரிமுத்து என்பவரை நைய புடைத்தது ஓரு கும்பல். இதையறிந்த எடப்பாடி பழனிசாமி, கடும் கோபத்தில் பொங்கி எழுந்துவிட்டாராம்.

ஆள் திரட்டவா

ஆள் திரட்டவா

நான் ஆள் திரட்டிக் காட்டவா என ஆவேசம் அடைந்த எடப்பாடி பழனிசாமியை அவருடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் தான் சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள், ஆதரவு முழக்கங்கள் என இதன் பின்னணியில் அவரது மூத்த மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பி.இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 3 சி வரை இதற்காக ஓபிஎஸ் தரப்பு செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயக்குமார் முன்னெச்சரிக்கை

ஜெயக்குமார் முன்னெச்சரிக்கை

மேலும், அதிமுகவுக்குள் வரத் துடித்துக்கொண்டிருக்கும் ஒருவரது ஆதரவையும் ஓபிஎஸ் எதிர்பார்க்கிறாராம். நேற்று இது தொடர்பான பேச்சும் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அதிமுக தலைமைக் கழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனது காரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மறித்து தகராறு செய்ததால், இன்று முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கில் தனது ஆதரவாளர்களை நிறுத்தி அதிமுக தலைமைக் கழகம் சென்று திரும்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

தொண்டர்கள் விரக்தி

தொண்டர்கள் விரக்தி

அதிமுகவில் எழுந்துள்ள அதிகார மோதலால் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் மன விரக்தி அடைந்திருக்கிறார்கள். எப்படி இருந்த கட்சி இப்படி ஆகி விட்டதே என அதிமுகவை நினைத்து புலம்புகிறார்கள். ஆனால் அவர்களின் புலம்பல் சத்தம் அதிகார யுத்தத்திற்கு மத்தியில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+