Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இரவில் தூங்க முடியவில்லை.. இதெல்லாம் ஒரு விளக்கமா.." செந்தில் பாலாஜி பதிலால் அதிமுக வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கி உள்ள நிலையில், ஆங்காங்கே மின்வெட்டும் ஏற்படத் தொடங்கி உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பலரும் புகார் கூறி வருகின்றனர்.

தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவினர் இந்த விவகாரத்தைச் சட்டசபையில் எழுப்பினர்.

கோடைக் காலம்

கோடைக் காலம்

கோடைக் காலத்தில் ஏற்படும் மின்தடையால் மக்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினர். மத்திய தொகுப்பிலிருந்து மின் விநியோகம் தடைப்பட்டதால் மின்தடை ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார், மேலும், தனியார் நிறுவனங்களிடம் கூடுதலான மின்சாரத்தையும், மாநில மின் உற்பத்தியையும் அதிகரித்து மின்தடை சரி செய்யப் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தார்.

அதிமுக வெளிநடப்பு

அதிமுக வெளிநடப்பு

இருப்பினும், அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக வெளிநடப்பு செய்தனர். சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "இன்று தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் அரசின் கவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

மின் தேவை

மின் தேவை

தமிழ்நாட்டில் தற்போது 16,500 மெகாவாட் முதல் 17,100 மெகாவாட் மின்சாரம் வரை தேவைப்படுகிறது. ஆனால், மாநிலத்தின் மின் உற்பத்தி 12,800 மெகாவாட்டில் இருந்து 13,100 மெகாவாட்டாக உள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து தேவையான நிலக்கரியைப் பெறாததாலும், நிலக்கரியை முறையாகக் கொள்முதல் செய்யாததாலும் இப்போது மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் அரசின் தவறான முடிவுகள் தான்.

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

கோடைக் காலம் வரும் போது மின் தேவை அதிகரிக்கும். அதிமுக ஆட்சியில் இதைக் கணக்கில் கொண்டு தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்து வைத்து இருந்தோம். இதன் மூலம் மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை எங்களால் வழங்க முடிந்தது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருந்தது.

கடந்த காலம்

கடந்த காலம்

கடந்த 2006-2011 ஆட்சியில் திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. நிர்வாக திறமை இல்லாத ஆட்சியால் மிக மோசமான மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பல தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்குச் சென்றது. பொருளாதாரமும் பின்தங்கியது. கடந்த காலத்திலும் சரி இந்த முறையும் சரி திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல், தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் அவதி

பொதுமக்கள் அவதி

ஆனால், அரசு இப்போது முறையாகச் செயல்படவில்லை. கோடைக் காலத்தைக் கருத்தில் கொண்டு மின்சார உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தேர்வு சமயத்தில் மாணவர்களால் படிக்க முடிவதில்லை. விவசாயிகளால் பம்பு செட்களை இயக்க முடிவதில்லை. மின்வெட்டு காரணமாக இரவு நேரங்களில் தூங்கக் கூட முடியவில்லை. சத்தீஸ்கரிலிருந்து தமிழ்நாடு வரை மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தின் பல பகுதிகளில்.... இரவு முழுவதும் மின்வெட்டு... தூக்கமின்றி கடும் அவதிப்பட்ட மக்கள்!
    அமைச்சர் விளக்கம்

    அமைச்சர் விளக்கம்

    இப்படிப் பல வழிகளில் மின் தேவையைப் பூர்த்தி செய்து இருக்கலாம். ஆனால், இதை எதையும் திமுக அரசு செய்யவில்லை. இதனால் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை நாங்கள் சட்டசபையில் கேள்வி எழுப்பினோம். இருப்பினும், அமைச்சரின் விளக்கம் இதில் திருப்திகரமாக இல்லை. இதைக் கண்டித்தே அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. ஏற்கனவே மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்வது குறித்துப் பரிசீலிப்பது காலம் கடந்த சிந்தனை" என்றும் அவர் விமர்சித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+