பெரிய ட்விஸ்ட்! ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் காலாவதியாகவில்லை! ஹைகோர்ட்டில் எடப்பாடி திடீர் யூடர்ன்
சென்னை: பொதுக்குழுவிற்கு எதிரான உயர் நீதிமன்ற வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு யூ டர்ன் போட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை என எடப்பாடி தரப்பு உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. ஆனால் இந்த பதவிகளுக்கு பொதுக்குழுவிற்கு ஒப்புதல் பெறப்படவில்லை என்று தேர்தல் ஆணையத்தில் குறிப்பிட்டு இருக்கிறோம் என எடப்பாடி தரப்பு உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரிய ஓ பன்னீர்செல்வம் மனு மீதான உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரணை இன்று மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ஓ பன்னீர்செல்வம் தொடுத்த இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மொத்தம் இரண்டு மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நீதிபதி 4 கேள்விகளை கேட்டனர்.

கேள்விகள்
நீதிபதி எடப்பாடியிடம் எழுப்பிய கேள்வியில்,. கேள்வி 1 - ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதியாகிவிட்டதா? . கேள்வி 2 - ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ள போது பொதுவக்குழுவை அவைத்தலைவர் எப்படி கூட்ட முடியும்? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழகம் எப்படி கடிதம் அனுப்ப முடியும். கேள்வி 3 - பொதுக்குழுவை கூட்ட எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். கேள்வி 4 - அதில் யார் கையெழுத்து போட வேண்டும், என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று பதில் அளித்தது.

பதில்
நேற்று நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளித்து வருகிறது. அதில், அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது. கட்சி பொதுக்குழு விவகாரங்களை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வரைவு நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தரவில்லை. தற்போது வெளியிடப்படும் வரைவு நிகழ்ச்சிகள் கட்சி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டவை . பொதுக்குழுவை கூட்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெற்றிடம்
2432 உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்கள் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என்று கட்சி விதி கூறுகிறது. தமிழக கழக நிர்வாகிகள் இருப்பதால் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது. ஒற்றைத் தலைமையை முன்மொழிய உரிமை உள்ளது.

எடப்பாடி தரப்பு உயர் நீதிமன்றத்தில் யூ டர்ன்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. கட்சி விதிகளை திருத்தம் செய்ய ஒட்டுமொத்த தொண்டர்களையும் அழைக்கும் வலிமை பொதுக்குழுவிற்கு உண்டு. பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சிக்கு எதிராகவும் பொதுக்குழுவுக்கும் எதிராகவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே வழக்கு தொடர்ந்துள்ளார். ஒட்டு மொத்த கட்சியும் தனக்கு எதிராக இருப்பதாக நினைத்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

செயற்குழு
ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இன்னும் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை. அதாவது அதாவது அந்த பதவிகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்படவில்லை.இந்த பதவிகளுக்கு பொதுக்குழுவிற்கு ஒப்புதல் பெறப்படவில்லை என்று தேர்தல் ஆணையத்தில் குறிப்பிட்டு இருக்கிறோம்.
இதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் கூட்டத்தை கூட்ட முடியும். தடைகேட்ட ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்க, துன்று உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி இருப்பதால்.. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி பொதுக்குழு கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்ட சிக்கல்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி இருப்பதால் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். எனவே ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த ஸ்டேட்மென்ட் அதிமுகவில் மிகப்பெரிய சட்ட சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications