ஸ்லிப்பான எடப்பாடி.. நேரம் பார்த்து கப்பென பிடித்த திமுக.. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.. போச்சு
சென்னை: லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இந்தியா கூட்டணியால் ஒருபோதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது; ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று குறிப்பிட்டார். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கவில்லை என்றால் பாஜக ஆட்சி அமைக்குமா என்று திமுகவினர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
பெரும் விவாதம், மோதலுக்கு பின்பே .. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அப்போது அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது, என்றார்.

அதன்பின் இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தனியாக கூட்டணி அமைத்தும், பாஜக தனியாக கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கின்றன. களத்தில் அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே கடும் வார்த்தை போர் நடக்கிறது.
பல்வேறு மேடைகளில் முன்னாள் முதல்வர் அதிமுகவின் மறைந்த ஜெயலலிதாவை பிரதமர் மோடி நினைவு கூர்ந்து பேசினாலும் கூட, அதிமுக - பாஜக என்னவோ தேர்தல் களத்தில் மோதிக்கொண்டுதான் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையை நேரடியாக விமர்சனம் செய்கிறார்.
ஆனால் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. எந்த இடத்திலும் மோடி பெயரை குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி விமர்சனமே வைக்கவில்லை. என்னதான் இந்த பிரச்சாரத்தில் பாஜகவை அவர் எதிர்த்தாலும் கூட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களை எடப்பாடி பழனிசாமி தவிர்த்து இருக்கிறார்.
தனது பிரச்சாரம் முழுக்கவே பாஜகவை விமர்சனம் செய்தாலும்.. இது பிரதமருக்கான தேர்தல் என்றாலும் கூட்டணியில் இல்லாத பாஜகவை சேர்ந்த மோடியை விமர்சனம் செய்வதை எடப்பாடி தொடர்ந்து தவிர்த்து வருகிறார். இதனால் எங்கே பாஜகவிற்கு தேசிய அளவில் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் அதிமுக அப்போது பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்குமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தியா கூட்டணி : இந்த நிலையில்தான் நேற்று பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்தியா கூட்டணியால் ஒருபோதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது; ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று குறிப்பிட்டார். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கவில்லை என்றால் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி மறைமுகமாக கூறுகிறாரா என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது.
இதை திமுகவும் கேள்வியாக எழுப்பி உள்ளது. திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை எழுப்பிய கேள்வியில், அதிமுக பாஜகவோடு கள்ளக்கூட்டணி என்று நாங்கள் சொல்லி வந்தது சரிதான் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி. பாஜகதான் மீண்டும் வரும் என பிரச்சாரம் செய்கிறார். சிறுபான்மையினரை ஏமாற்ற முயற்சித்து, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது., என்று விமர்சனம் வைத்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications