Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடிக்கு போனை போடும் விஜய்.. இதுதான் சரியான வாய்ப்பு.. தவெக எடுக்கும் முக்கிய முடிவு? ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்குள் தற்போது உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளதாம். இப்படிப்பட்ட நேரத்தில் அந்த கட்சியை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம். விரைவில் விஜயுடன் எடப்பாடி பழனிசாமி போனில் பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கரூரில் 41 பேர் பொதுமக்கள் விஜய் கண் முன் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. அந்த கட்சியையும் கடுமையாக நிலைகுலைய வைத்துள்ளது. முக்கியமாக கட்சிக்கு உள்ளே கடுமையாக உட்கட்சி பூசலை ஏற்படுத்தி உள்ளது. திமுக, அதிமுகவில் எல்லாம் மாவட்ட செயலாளர்கள் என்பவர்கள் அமைச்சர்களை விட பவர் புல் நபர்கள்.

TVK Vijay

ஆனால் இங்கே மாவட்ட செயலாளரை கைது செய்துள்ளனர். ஆனால் விஜய் வீடியோவில் ஒரு கண்டனம் கூட சொல்லவில்லை. ஒரு போஸ்ட் கூட போடவில்லை. இப்படி கைவிட்டு விட்டார்களே.. இது சரியா என்று குரல் எழுப்ப தொடங்கி உள்ளார்களாம்.

டாப் தலைகளுக்கு இடையே மோதல்

இன்னொரு பக்கம் விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் டாப் தலைகளுக்கு இடையிலேயே மோதல் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது இந்த அசம்பாவிதத்திற்கு யார் பொறுப்பேற்பது என்று தெரியாமல் இவர்களுக்கு இடையே மாறி மாறி பழி போட்டு.. அதுவே இவர்களுக்கு இடையே கடுமையான மோதலாக மாறிவிட்டது.

கட்சிக்கு உள்ளேயே ஆதவ் அர்ஜுனா - அருண் - ஜான் ஆரோக்கியசாமி இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறபடுகிறது. என்றால் கரூரில் திடீரென கூட்டம் நடத்த வேண்டும் என்று ஐடியா கொடுத்தது ஒருவர்.. அதற்கு தீவிரமாக பல மாவட்டங்களில் இருந்து கூட்டம் கூட்டியது இன்னொருவர் .. அங்கே மெதுவாகபோகலாம் . தாமதமாக போகலாம் என்று வியூகங்களை வகுத்தது இன்னொருவர்.

எடப்பாடி குஷி

இந்த விவகாரத்தை போட்டி குறைந்துவிட்டது என்று அணுகாமல் தனக்கு வாய்ப்பாக எடப்பாடி கருதுகிறாராம். விஜய் அரசியல் முடிய கூடாது என்று நினைக்கிறாராம். விஜய் அரசியலில் இருக்க வேண்டும். நமக்கு கூட்டணி வைக்கவும் வலுவான முகம் தேவை. விஜயகாந்த் இருந்திருந்தால் செய்ய வேண்டியதை விஜயை வைத்து செய்யலாம்.

ஆனால் அவர் நம்மை விடவும் அதிகமும் வளர கூடாது. தேர்தல் நேரத்தில் கூட்டணி கேட்டிருந்தால் 100+ இடங்களை கேட்டிருப்பார். இப்போது சிக்கல் இல்லை. அவர் பேரம் பேசும் இடத்தில் இல்லை. அவருடன் இப்போது வலுவான நபர்கள் இல்லை. இப்போது அவருக்கு உதவியாக நாம் நிற்கலாம். 30-40 இடங்கள்தான் கொடுப்போம் என்று கூறி அவரை சம்மதிக்க வைக்கலாம். அவரை நாம்தான் வழிகாட்ட வேண்டும். வேறு தலைவர்கள் அவருக்கு இல்லை என்று எடப்பாடி நினைக்கிறாராம்.

அந்த கட்சியை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம். விரைவில் விஜயுடன் எடப்பாடி பழனிசாமி போனில் பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழக உள்ளே கடும் நெருக்கடி

கரூர் சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது என்ற கோபம் இவர்களுக்கு இடையே ஏற்பட்டு உள்ளதாம். அதனால் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம், மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கு உள்ளே கிட்டத்தட்ட அரசியல் போர் வெடித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

பல கட்சிகள் இது போன்ற சவாலை எதிர்கொள்ளும். ஆனால் அது போன்ற சவால்களுக்கு பின் உட்கட்சி மோதல்கள் சில நாள் கழித்து சரி ஆகும். ஆனால் இங்கே கட்சி தொடங்கிய சில மாதங்களில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து உள்ளது. இதனால் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்துவிட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+